காந்தி நினைவு தினம் : தலைவர்கள் அஞ்சலி
புதுடில்லி: தேசப்பிதா மகாத்மா காந்தியின் 62வது நினைவு தினமான நேற்று, நாடு முழுவதும் அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. டில்லியில் ராஜ்காட்டில் உள்ள காந்தியின் சமாதியில், ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், துணை ஜனாதிபதி அமீது அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங், ஐ.மு., கூட்டணி தலைவர் சோனியா, காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல், எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் உட்பட பலர், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். காந்தியின் சமாதி அருகே, சர்வமத பிரார்த்தனைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.






