புதிய சட்டசபை திறப்பு விழா : ஜெயலலிதாவுக்கு அழைப்பிதழ்
சென்னை : அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவிற்கு, புதிய சட்டசபை திறப்பு விழாவுக்கான அழைப்பிதழை, பொதுப்பணித் துறை செயலர் ஜோதி ஜெகராஜன் நேற்று நேரில் வழங்கினார்.
புதிய சட்டசபை திறப்பு விழா, வரும் 13ம் தேதி நடக்கிறது. இவ்விழாவில், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா, தமிழக முதல்வர் கருணாநிதி உட்பட பல் வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். துணை முதல்வர் ஸ்டாலின், சமீபத்தில் டில்லி சென்று பிரதமர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களுக்கு நேரில் அழைப்பிதழ் கொடுத்தார். இந்நிலையில், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., பொதுச் செயலரும், சட்டசபை எதிர்க் கட்சித் தலைவருமான ஜெயலலிதாவிற்கும், அழைப்பிதழ் கொடுக்கப் பட்டுள்ளது. பொதுப்பணித் துறை செயலர் ஜோதி ஜெகராஜன், நேற்று போயஸ் தோட்ட இல்லத்திற்கு நேரில் சென்று ஜெயலலிதாவிடம் அழைப்பிதழை வழங்கினார்.
விழாவில் ஜெயலலிதா கலந்துகொள்வாரா, மாட் டாரா என்று அனைவரும் ஆர்வமாக எதிர் பார்த்த நேரத்தில், நேற்றே கோடநாடு பங்களாவிற்கு ஜெயலலிதா சென்று விட் டார். சட்டசபை திறப்பு விழா அழைப்பிதழ் களை, பல் வேறு தலைவர்களுக்கு வழங்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி, ஆந்திரா, கேரளா, கர் நாடகா ஆகிய மாநிலங் களின் முதல் வர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களுக்கு நாளை அழைப்பிதழ் கொடுப்பதற் காக செல்கிறார்.
கோடநாட்டில் ஜெ.,: அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா ஓய்வுக்காக கோத்தகிரி கோடநாடு எஸ்டேட்டுக்கு நேற்று வருகை தந்தார். சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த ஜெயலலிதா, ஹெலிகாப்டரில் கோடநாடு எஸ் டேட்டில் உள்ள ஹெலிபேடில் பகல் 1.10க்கு இறங்கினார். பின் அங்கிருந்து காரில் எஸ்டேட்டுக்கு வந் தார். நீலகிரி மாவட்ட அ.தி.மு.க., அவைத் தலைவர் தேனாடு லட்சுமணன் தலைமையில் எஸ்டேட் பங்களா நுழைவாயிலில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.






