நகரத்து ஜோடிகளை மிஞ்சியது கிராமத்து ஜோடிகள் : டும்டும்…முக்கு முன்பே ‘அதில்’

புதுடில்லி : திருமணத்துக்கு முன் செக்ஸ் உறவு குறித்து தேசிய அளவில் நடத்தப்பட்ட சர்வேயில் வியப்பான விஷயம் தெரியவந்துள்ளது; இந்த விஷயத்தில், நகர மக்களை, கிராம ஜோடிகள் மிஞ்சி வருகின்றன என்பது தான் அந்த தகவல். இந்தியாவில், 15 வயதில் இருந்து 24 வயதுக்கு உட்பட்ட இளம் பெண்கள், 15 வயதை அடையும் முன்னரே உடலுறவில் ஈடுபடுகின்றனர் என்று சர்வே தெரிவிக்கிறது.

மத்திய சுகாதார அமைச்சகம் திருமணத்திற்கு முந்தைய செக்ஸ் குறித்த சர்வேயை எடுக்க ஆந்திரா, பீகார், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், மகாராஷ்டிரா மற்றும் தமிழகம் ஆகிய ஆறு மாநிலங்களை தேர்ந்தெடுத்தது; 15 சதவீத இளைஞர்களிடமும், 4 சதவீத இளம் பெண்களிடமும் இந்த சர்வே எடுக்கப்பட்டது. சர்வேயில் தெரியவந்துள்ள தகவல்கள்: திருமணம் ஆன மற்றும் திருமணம் ஆகாத ஆண், பெண்கள் வகையில் மொத்தம் 51 ஆயிரம் பேர்களிடம் சர்வே எடுக்கப்பட்டது. பெண்களை ஆண்களுடன் ஒப்பிட்டு பார்க்கையில், 24 சதவீத இளம்பெண்கள், 15 வயதை அடையும் முன்னரே உடலுறவு கொண்டுள்ளனர். ஆனால், இளைஞர்கள் வகையில் 9 சதவீதம் பேர் தான் திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துள்ளனர்.

திருமணத்துக்கு முன் உடலுறவு கொள்வது இந்தியாவில் பரவலாக இருந்து வருகிறது. டில்லியில் உள்ள மக்கள் தொகை கவுன்சிலும், மும்பையில் உள்ள பன்னாட்டு மக்கள் தொகை விஞ்ஞான பயிற்சி மையமும் சேர்ந்து நடத்திய விரிவான கணக்கெடுப்பில் இந்தியாவில் நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் தான் இளம் வயதினர் திருமணத்திற்கு முன் அதிகமாக செக்ஸ் வைத்துள்ளனர் என்றும் தெரிய வந்துள்ளது. இளைஞர்களில், திருமணத்துக்கு முன், நகர்ப்பகுதியில் 17 சதவீதம் பேரும், கிராமப்பகுதியில் 29 சதவீதம் பேரும் உடலுறவில் ஈடுபடுகின்றனர். அதே சமயம் இளம்பெண்களில் கிராமப்பகுதியில் 46 சதவீதமும், நகர்ப்பகுதியில் 31 சதவீதம் பேரும், திருமணத்துக்கு முன்னதாகவே உடலுறவு கொள்கின்றனர்.

நகர்ப்புறத்தில் ஒரு சதவீதமும், கிராமப்புறத்தில் 6 சதவீத இளைஞர்களும் 18 வயதை அடையும் முன்னர் செக்ஸ் வைத்துக் கொள்கின்றனர். 26 சதவீத இளைஞர்களும், 46 சதவீத இளம்பெண்களும், 15 வயதை அடையும் முன்னர் தங்களுடைய காதலருடன் செக்சில் ஈடுபட்டு அதிக நேரத்தை செலவழிக்கின்றனர். பெரும்பாலானவர்களின் செக்ஸ் உறவுகள் மிகவும் அபாயகரமாக உள்ளது. அவர்கள் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுடன் உறவு கொள்கின்றனர். 25 சதவீத இளைஞர்களும், 21 சதவீத இளம் பெண்களும் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுடன் உறவு கொள்கின்றனர்; உறவின் போது காண்டம் பயன்படுத்துவது குறைந்த அளவே இருந்து வருகிறது. ஆண்களில் 13 சதவீதத்தினரும், பெண்களில் மூன்று சதவீதத்தினரும் காண்டம் பயன்படுத்துகின்றனர்.

இந்த ஆறு மாநிலங்களை பொறுத்தவரையில் உடலுறவுகள் பரவலாக பாதுகாப்பற்ற முறையில் தான் நடக்கின்றன. இந்த வித்தியாசம் மாநிலங்களிடையே மாறுபடுகின்றன. ராஜஸ்தான் தவிர மற்ற ஐந்து மாநிலங்களில் இளைஞர்கள் 32 சதவீதம் பேர் ஒன்றுக்கு மேற்பட்டோருடன் உறவு கொள்கின்றனர். ராஜஸ்தானில் 14 சதவீதமே நடக்கிறது. இவ்வாறு சர்வேயில் தெரியவந்துள்ளது.

Related Posts with Thumbnails
Share and Enjoy:
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • Blogplay
  • Add to favorites
  • Diggita
  • LinkedIn
  • MySpace
  • Technorati
  • Tumblr
  • Twitter

Leave a Reply

You must be logged in to post a comment.

We will keep You Updated...
Sign up to receive breaking news
as well as receive other site updates!
Featured Video
Sponsors
Hot Topics

விடைத்தாள் மாயமான மாணவர்களுக்கு மறுதேர்வு : தேர்வு கடினம் என 'புலம்பல்'

முசிறி: முசிறியில், 262 விடைத்தாள் காணாமல் போன மாணவர்களுக்கு, நேற்று ...

மனைவியை எரித்து கொன்ற கணவருக்கு ஆயுள்

பெரியகுளம் : வரதட்சணை கேட்டு மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி, தீ வைத்து ...

ஜெயில் கதவு திறந்தாச்சு ; காற்றாக வருகிறார் நித்தியானந்தர்; ரூ. 3 லட்சம் பணத்துடன் கைது

சிம்லா ; நடிகையுடன் உல்லாசமாக இருந்த நித்தியானந்தர் இமாச்சல பிரதேசத்தில் ...

ஏர்.ஆர்.ரகுமானுக்கு அமெரிக்க கிராமி விருதுகள் : இந்தியர்களையும் - இறைவனையும் நினைவுகூர்ந்தார்

லாஸ்ஏஞ்சல்ஸ்: உலக அளவில் கலைஞர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ...

ரஞ்சிதா விவகாரம்! கையை பிசையும் நடிகர் சங்கம்!!

நடிகை ரஞ்சிதா, பிரபல சாமியார் நித்தியானந்தாவுடன் உல்லாசமாக இருக்கும் ...
Mankatha Official Website
செய்திகளை தேடு
Custom Search
Cute Babies
தேதி வாரியாக
Ads
Endhiran
A2Z Indian Ads
Trailer
ISD Number Search
சுட சுட செய்திகள்
Categories
Recent Posts

வட இந்தியாவில் கடுமையான நிலநடுக்கம்

சிக்கிம்: சிக்கிமில் கடுமையான நிலநடுக்கம் ...

ஆண் பிள்ளைகளுக்கு ஆபத்து என தெருவில் விளக்கேற்றும் பெண்கள்

திருவள்ளூர்: எருமையின் மீது புத்தாண்டு ...

மாணவியை தாக்கிய பயிற்சி ஆசிரியை மீது போலீசில் புகார்

ஆத்தூர் : ஆத்தூரை அடுத்த நாவுக்குறிச்சியைச் ...

எட்டாம் வகுப்பு தேர்வெழுதிய 60 வயது "இளசு'

திருப்பூர் : தாராபுரத்தை சேர்ந்த 60 வயது ...
Recent Comments
Great One... Those who are not an Indian are requested not to answer it.Really bollywood songs are becoming rocking day by day but
Hello... My life,vist it http://sylviaj.webgarden.com/ ,Thanks....
Hello... My life,vist it http://juhuacha.chefcuisto.com/2011/09/02/local-wedding-cakes/ ,Thanks....
Hello... My life,vist it http://juhuacha.chefcuisto.com/2011/09/02/local-wedding-cakes/ ,Thanks....
Hello... My life,vist it http://xiangcai.blogfa.com/post-1.aspx ,Thanks....
Tag Cloud