பிளஸ் 2 தேர்வில் காப்பி அடித்தால்: மாணவர்களுக்கு எச்சரிக்கை போஸ்டர்
கோவை:தமிழகம் முழுவதும் இன்று பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் துவங்குகின்றன. கோவை மாவட்டத்தில் மொத்தம் 30 ஆயிரத்து 926 பேர் தேர்வு எழுதுகின்றனர்."முறைகேடுகளில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என, போஸ்டர்கள் மூலம் மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் இன்று துவங்குகின்றன. பொள்ளாச்சி கல்வி மாவட்டம் இணைந்த கோவை வருவாய் மாவட் டத் தில், 267 பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 30 ஆயிரத்து 926 மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகின்றனர்.தேர்வில் மாணவர்கள் காப்பி அடிப்பது உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபடுவதை கண் காணிக்க, மாவட்டம் முழுவதும் 75 பேர் கொண்ட, "பறக்கும் படை' அமைக்கப்பட்டுள்ளது.
பார்வையற்றோர், டிஸ் லெக்சியா குறைபாடு, கைகள் ஊனமுற்றோர் தேர்வு எழுத சிறப்பு ஏற் பாடுகள் செய்யப்பட் டுள்ளன.தேர்வு அறையில் மாணவர்கள் எவ்வித முறை கேடுகளிலும் ஈடுபடக் கூடாது என அச்சிடப் பட்ட போஸ்டர்கள், தேர்வு மையங்களில் ஒட்டப்பட் டுள்ளன.அதில், "அனுமதிக்கத்தகாத துண்டுத்தாள், மொபைல் போன் வைத்திருந்தாலோ, வினாத்தாள் அல்லது விடைத்தாளை பரிமாற்றம் செய்தாலோ ஓராண்டு முதல் ஐந்தாண்டுகள் வரை அல்லது நிரந்தரமாக படிக்கவோ, தேர்வு எழுதவோ தடை விதிக்கப் படும்."மதிப்பெண் சான்றிதழ்கள் ரத்து, நிறுத்தம் செய்வது உள்ளிட்ட தண்டனைகளுக்கு ஆளாக நேரிடும்.இதன் காரணமாக எதிர் காலமே பாதிக்கப்படலாம் என்பதால், தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட வேண்டாம்' என எச்சரிக்கை விடுக்கப்பட் டுள்ளது.கடந்த இரு ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் வினாத்தாளை படித்துப் பார்க்க 10 நிமிடம் கூடுதலாக வழங்கப்படுகிறது.






