புதிய சட்டசபை வளாகம் முதல்வருக்கு சோனியா பாராட்டு
சென்னை : தமிழக சட்டசபை வளாகத்தை பிரம்மாண்டமாக உருவாக்கிய முதல்வர் கருணாநிதிக்கு, காங்கிரஸ் தலைவர் சோனியா பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபை வளாகத் திறப்பு விழாவையொட்டி, வெளியிடப்பட்டுள்ள சிறப்பு மலருக்கு, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா வாழ்த்துச் செய்தி அனுப்பியிருக்கிறார்.
அதன் விவரம்: தங்களின் ஆழ்ந்த ஈடுபாடு காரணமாகவும், இக்கட்டடத்தின் கட்டுமானப் பணிகளின் ஒவ்வொரு நிலையிலும் தாங்கள் அடிக்கடி சென்று பார்வையிட்டு, வழங்கிய ஆலோசனைகளின் பயனாகவும் இந்தக் கட்டடம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இதன் திறப்பு விழாவை ஒட்டி, வெளிவர இருக்கும் மலருக்காக எனது வாழ்த்துச் செய்தி அனுப்பப்பட்டுள்ளது. தங்களுக்கு எனது பாராட்டுக்கள், நல்வாழ்த்துக்கள்.






