பென்னாகரத்தில் நாளை வேட்பு மனு தாக்கல்
பென்னாகரம் இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை துவங்குகிறது. பென்னாகரம் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., பெரியண்ணன் இறந்ததைத் தொடர்ந்து, இடைத்தேர் தல் அறிவிக்கப்பட்டது. தி.மு.க., சார்பில் மறைந்த எம்.எல்.ஏ., பெரியண்ணன் மகன் இன்பசேகரனும், அ.தி.மு.க., சார்பில் தர்மபுரி மாவட்டச் செயலர் அன்பழகன், பா.ம.க., சார்பில் அக்கட்சி தலைவர் மணியின் மகன் தமிழ்குமரனும், தே.மு.தி.க., சார்பில் அக்கட்சி மாவட்ட பொரு ளாளர் வக்கீல் காவேரிவர்மன் ஆகியோர் வேட் பாளராக அறிவிக்கப்பட் டுள்ளனர்.
தற்போதைய நிலையில் தி.மு.க., மற்றும் பா.ம.க., ஆகிய கட்சிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவி வருகிறது. இவ்விரு கட்சியினரும், கடந்த டிசம்பர் இறுதியில் இருந்தே தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளனர். அ.தி.மு.க., மற்றும் தே.மு.தி.க., சார்பில் கட்சி நிர்வாகிகள் சந்திப்பும், செயல்வீரர் கூட்டங்களும் நடந்து வருகின்றன. இந் நிலையில், மனு தாக்கல் நாளை துவங்கி, வரும் 10ம் தேதி வரை நடக்கிறது.
தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான அமுதாவிடம் மனுக்கள் தாக்கல் செய்யலாம். காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரையில் மனுக்கள் பெறப்படும். மனு பரிசீலனை 11ம் தேதி நடக்கும். மனு வாபஸ் பெற, 13ம் தேதி கடைசி நாள்; 27ம் தேதி ஓட்டுப்பதிவு நடத்தப் பட்டு, 30ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.
வாக்காளர் இறுதிப் பட்டியல் இன்று வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தொகுதியில், மொத்தம் ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 525 வாக்காளர்கள் உள்ளனர். அதற்கான துணை வாக்காளர் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட் டது. இன்று வெளியாகும் பட்டியலில், மேலும் சில வாக்காளர் சேர்க்க வாய்ப்புள்ளது.
மனு தாக்கலை முன்னிட்டு கலெக்டர் அலுவலகத்துக்கு மூன்றடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அ.தி.மு.க., வேட்பாளர் 4ம் தேதியும், தி.மு.க., வேட்பாளர் 5ம் தேதியும் மனு தாக்கல் செய்ய உள்ளதாக, அவ்விரு கட்சி நிர்வாகிகளும் கூறி வருகின்றனர். "அனைத்து கட்சியினரும் தேர்தல் நடத்தை விதிமுறையை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்; விதிமுறைப்படி வேட் பாளர்களுடன் குறிப்பிட்ட வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும்' என அனைத்து கட்சியினருக்கும், தேர்தல் கமிஷன் சார்பில் அறிவுறுத்தப் பட்டுள்ளது.
கொளுத்தும் வெயிலில் உச்சகட்ட பிரசாரம் : பென்னாகரம் தொகுதியில் பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் இருந்து கோடையை மிஞ்சும் வகையில் வெயில் உக்கிரம் அதிகரித்துள்ளது. தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசியல்கட்சியினர், வெயில் உக்கிரத்தால் சோர்வடையாமல் இருக்க, அதிகாலை மற்றும் மாலை முதல் இரவு வரையில் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்களின் பிரசாரத்தின் போது வெயில் உக்கிரம் இன்னும் அதிகம் இருக்கும். அதனால் முக்கிய தலைவர்களின் பிரசார நிகழ்ச்சிகளை மாலை நேரத்தில் நடத்த அரசியல் கட்சியினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.






