சாமியாருடன் நடிகை ரஞ்சிதா படுக்கை அறை காட்சிகள்; தமிழகம் முழுவதும் பரபரப்பு
சென்னை: தமிழ் நடிகை ரஞ்சிதா, பிரபல சாமியார் நித்தியானந்தாவுடன் உல்லாசமாக இருந்த வீடியோ வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. திருவண்ணாமலையை சேர்ந்த நித்தியானந்தாவின் இயற்பெயர் ராஜசேகரன். இவருக்கு தமிழகத்திலும், கர்நாடகாவிலும் ஆசிரமங்கள் உள்ளன. பெங்களூருவில் மைசூர் சாலையில் உள்ள பிடுதி பகுதியில் 200 ஏக்கர் பரப்பளவில் நித்தியானந்த தியான பீடம் என்ற ஆசிரமம் உள்ளது. இதுதான் நித்தியானந்தாவின் தலைமையகம்.
32 வயதே நிரம்பிய நித்தியானந்தா, கதவை திற காற்று வரும் என்ற தலைப்பில் போதனைகளை கூறி வந்தார். லட்சக்கணக்கான பக்தர்களை கொண்டிருக்கும் அவர் தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. அதில் நித்தியானந்தா, அந்த நடிகையிடம் சில்மிஷங்களில் ஈடுபடுவது போலவும், உல்லாசமாக படுக்கையை பகிர்ந்து கொள்வது போலவும், தண்ணீர் கொடுப்பது போன்றும், மாத்திரை கொடுப்பது போன்றும் காட்சிகள் பதிவாகியுள்ளன. ஆனால் அந்த வீடியோ எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்ற தகவல் எதுவும் வெளியாகவில்லை.
நித்தியானந்தாவின் முகத்திரையை கிழித்திருக்கும் இந்த வீடியோவில் அவருடன் உல்லாசமாக இருக்கும் நடிகை ரஞ்சிதா பாரதிராஜாவின் படத்தில் அறிமுகமானவனர்; பாரதிராஜாவின் சின்னத்திரை தொடரிலும் நடித்தவர்.
என்ன செய்யப்போகிறது தமிழ் திரையுலகம்? : சமீபத்தில் நடிகை புவனேஸ்வரி விபசார வழக்கில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, பத்திரிகைகளில் வெளியான செய்தியை கண்டித்து நடந்த தென்னிந்திய நடிகர் சங்க கூட்டத்தில் பேசிய நடிகர், நடிகைகள் பலரும் ஆபாசமாக பேசி பத்திரிகையாளர்களை விமர்சித்தனர். நடிகர் – நடிகைகளின் இந்த பேச்சு பத்திரிகையாளர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கூட்டத்தி்ல பேசிய நடிகர் சூர்யா, நடிகைகளை பாதுகாக்க சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக எவ்வளவு பணம் தேவைப்பட்டாலும் நான் கொடுக்கிறேன், என்று கூறினார். நடிகர் சூர்யா, இதுபோன்று சாமியாருடன் உல்லாசமாக இருக்கும் நடிகைகளுக்கும் சட்டப்பூர்வ பாதுகாப்பு கொடுப்பாரா? எதற்கெடுத்தாலும் கண்டனக் குரல் எழுப்பி, கூட்டம் நடத்தி, கண்டன தீர்மானம் போடும் நடிகர் சங்கம், இந்த சர்ச்சைக்குரிய நடிகை மீதும் கண்டனம் தெரிவித்து நடவடிக்கை எடுக்குமா?
ஆசிரமம் சூறை!: சுவாமி நித்தியானந்தா நடிகையுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ வெளியானதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அவரது ஆசிரமங்கள் சூறையாடப்பட்டு வருகின்றன. திருவண்ணாமலையில் உள்ள ஆசிரமத்தை இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள் முற்றுகையிட்டனர். நித்தியானந்தாவின் படங்களை தீ வைத்து கொளுத்தினர். புதுவையிலும் ஏராளமான பொதுமக்கள் நித்தியானந்தாவின் ஆசிரமத்தை சூறையாடினார்கள். மேலும் கடலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருக்கும் ஆசிரமங்களை சூறையாடி வரும் இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள், சுவாமி நித்தியானந்தாவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், அவரது சொத்துக்களை அரசு பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.






