சிம்புவுடன் லிப் டூ லிப் கிஸ்! தப்பில்லை என்கிறார் த்ரிஷா!!
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிம்பு ஜோடியா நடித்திருக்கும் த்ரிஷா, சிம்புவின் உதட்டோடு உதடு பதித்து பல காட்சிகளில் பல முத்தங்களை கொடுத்துள்ளார். குறிப்பாக ஒரு பாடல் காட்சியில் மட்டும் இந்த ஜோடி ஒரு முத்த புரட்சியே செய்திருந்தது. இதுபற்றி த்ரிஷா அளித்துள்ள பேட்டியில், நான் சினிமாவில் ஒரு நிலையை எட்டி விட்டேன். சினிமாவுக்கு புதுசா வந்த மாதிரி, முத்தக் காட்சி, பிகினி ட்ரஸ்ல நடிக்க மறுக்க மாட்டேன். அப்படி மறுத்தால் அது எனக்குத்தான் தகுதி குறைவு. முத்தக்காட்சியில் நடிப்பதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிம்புவுக்கு முத்தம் கொடுக்க வேண்டிய கட்டாயம். அதனால் முத்தமிட்டேன். அதில் தவறே இல்லை. அந்த படத்தில் என்னோட கேரக்டரை பாராட்டி இ-மெயிலில் நிறைய வாழ்த்துக்கள் குவிகின்றன. இதுவரை இல்லா அளவுக்கு பாராட்டு வருகிறது. அவர்களுக்கெல்லாம் பதில் அனுப்பி வருகிறேன், என்று கூறியுள்ளார்.






