சச்சின் ஒரு பாரத ரத்னா : கங்குலி புகழாரம் ரத்னா
கோல்கட்டா : ""ஒருநாள் போட்டிக் கான கிரிக்கெட் அரங்கில், 200 ரன்கள் எடுத்து புதிய உலக சாதனை படைத்த மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், ஒரு "பாரத ரத்னா' என,'' முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், சமீபத்தில் குவாலியரில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 200 ரன்கள் எடுத்து, புதிய உலக சாதனை படைத்தார். கிரிக்கெட் அரங்கில் மேலும் ஒரு புதிய சரித்திரம் படைத்த இவரை, முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் பலர், புகழாரம் சூட்டினர். இவருக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர். இவ்வரிசையில் முன்னாள் இந்திய கேப்டன் கங்குலியும் இணைந்து கொண்டார்.
இதுகுறித்து கங்குலி கூறியதாவது: கிரிக்கெட் அரங்கில் பல்வேறு சாதனைகள் படைத்து வரும் சச்சின், ஒரு "பாரத ரத்னா'. இவருக்கு கட்டாயமாக பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும். இவர் கிரிக்கெட் அரங்கில் மேலும் பல புதிய சாதனைகளை படைக்க எனது வாழ்த்துக்கள். மூன்றாவது ஐ.பி.எல்., தொடருக்கு கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணி சிறப்பாக பயிற்சி மேற்கொண்டு வருகிறது. கடந்த இரண்டு தொடர்களில் சோபிக்க தவறிய எங்கள் அணி, இம்முறை முழுதிறமையை வெளிப்படுத்தி கோப்பை வெல்ல போராடும். இம்முறை எங்கள் அணியில் மிகச் சிறந்த பவுலர் கள் இடம் பெற்றிருப்பது கூடுதல் பலம். ஷேன் பாண்ட், பிராட் ஹாஜ், இஷாந்த் சர்மா, அஜந்தா மெண்டிஸ், அசோக் டிண்டா, அஜித் அகார்கர், சுக்லா உள்ளிட்ட முன்னணி பவுலர்கள், சாதிக்க அதிக வாய்ப்பு உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி வரும் மெக்கலம், விரைவில் அணிக்கு திரும்புவார். அவர் வரும் வரை, விக்கெட் கீப்பர் பொறுப்பை விருதிமன் சகா கவனித்துக் கொள் வார். தவிர, மூன்றாவது விக்கெட் கீப்பரை தேர்வு செய்ய அணி நிர்வாகம் தீர்மானித்து உள்ளது.இவ்வாறு கங்குலி கூறினார்.






