திருமணமான மகள்களும் முழு நஷ்டஈடு பெற சட்ட திருத்தம்

ஒரு விபத்தில் தந்தை இறந் தால், திருமணமாகி கணவருடன் சேர்ந்து வாழும் பெண் வாரிசுகள் முழு நஷ்டஈடு பெற உரிமை யில்லை. ஆண் வாரிசுகளுக்கு முழுமையான நஷ்டஈடு பெற உரிமை இருப்பது போல், திருமணமான பெண்களுக்கும் உரிமை வேண்டும். இதற்கான சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்பது பெண்களின் எதிர்பார்ப் பாக உள்ளது.மோட்டார் வாகன சட்டத்தில், நஷ்டஈடு கோரி யார், யார் விண்ணப்பிக்கலாம் என, கூறப்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள், சொத் துக்களின் உரிமையாளர், இறந் தவரின் சட்டப்பூர்வ பிரதிநிதி, காயமடைந்தவரால் அங்கீகரிக்கப்பட்ட ஏஜன்ட் ஆகியோர் நஷ்டஈடு கோரி விண்ணப்பிக்கலாம்.

பொதுவாக குடும்பத் தலைவர் விபத்தில் இறந்தால், நஷ்டஈடு கோரி அவரது மனைவி, குழந்தைகள், இறந்தவரின் பெற்றோர் வழக்கு தொடர்வர். குடும்பத் தலைவரை நம்பி இவர்கள் வாழ்வதால், நஷ்டஈடு கோர இவர்களுக்கு உரிமை உள்ளது. இறந்தவருக்கு திருமணமான மகன் இருந்தால், அவரும் நஷ்ட ஈடு கோரலாம். ஏனென்றால், தந்தையை கவனிக்க வேண்டிய கடமை மகனுக்கு உள்ளது என்பதால்.அதே நேரத்தில், அந்த தந்தைக்கு திருமணமான மகள் இருந்தால், அவரால் முழு நஷ்டஈட்டுத் தொகையை பெற முடியாது. அதாவது கணவருடன் சேர்ந்து வாழும் ஒரு பெண்ணுக்கு, அவரது தந்தையின் இறப்பு மூலம் முழு நஷ்டஈடு தொகை கிடைக்காது. வெறும் 50 ஆயிரம் ரூபாய் மட்டுமே கிடைக்கும். இது பாரபட்சத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது என்பது தான் பெண்களின் குற்றச்சாட்டு.

மோட்டார் வாகன சட்டம் 1988, பெண்களுக்கான சம உரிமையை மறுக்கும் விதத்தில் உள்ளதால், அந்தச் சட்டத்தில் உரிய திருத்தம் கொண்டு வர வேண்டும் என, அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.கணவருடன் சேர்ந்து வாழும் பெண்ணுக்கு , அவரது தந்தை விபத்தில் இறந்தால், 50 ஆயிரம் ரூபாய் மட்டுமே நஷ்ட ஈடாக கிடைக்கும். இதுவும் 2007ம் ஆண்டு ஒரு வழக்கில் சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பிற்கு பிறகே அமலானது.அதேநேரத்தில், கணவர் இறந்து விட்டாலோ அல்லது திருமணம் ஆகாமல் இருந்து தந்தையை மட்டுமே அந்த மகள் சார்ந்து இருக்கும் பட்சத்தில், முழு நஷ்டஈட்டுத் தொகையை பெறலாம். தந்தையின் இறப்பின் மூலம் கிடைக்கும் நஷ்டஈட்டை திருமணமான ஆண்வாரிசு பெற உரிமையிருக்கும் போது, திருமணமான பெண்களுக்கும் அந்த உரிமையை வழங்க வேண் டும். இதற்கேற்ற வகையில், சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்பதே கோரிக்கை.

இதுகுறித்து, மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் ஆஜராகும் வக்கீல் வி.எஸ்.சுரேஷ், "கணவரை இழக் கும் பெண்கள் மறுமணம் செய்து கொண்டால், அந்தப் பெண் ணுக்கு கணவனின் இறப்பின் மூலம் முழு நஷ்டஈடும் பெற முடியாது. தங்களுக்கு மறுமணம் ஆனதை மறைத்து நஷ்டஈடு பெறுபவர்களும் உண்டு.""ஒரு பெண் திருமணம் ஆகி கணவருடன் வாழ்கிறார் என்பதற்காக, தனது தந்தையின் இறப்பின் மூலம் முழு நஷ்டஈடு பெற முடியாது எனக் கூறுவது சரியானது தானா என்பதை சமூக அமைப்புகள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இதற்காக மோட்டார் வாகனச் சட்டத்தில் உரிய சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும்' என்றார்.

Related Posts with Thumbnails
Share and Enjoy:
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • Blogplay
  • Add to favorites
  • Diggita
  • LinkedIn
  • MySpace
  • Technorati
  • Tumblr
  • Twitter

Leave a Reply

You must be logged in to post a comment.

We will keep You Updated...
Sign up to receive breaking news
as well as receive other site updates!
Featured Video
Sponsors
Hot Topics

விடைத்தாள் மாயமான மாணவர்களுக்கு மறுதேர்வு : தேர்வு கடினம் என 'புலம்பல்'

முசிறி: முசிறியில், 262 விடைத்தாள் காணாமல் போன மாணவர்களுக்கு, நேற்று ...

மனைவியை எரித்து கொன்ற கணவருக்கு ஆயுள்

பெரியகுளம் : வரதட்சணை கேட்டு மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி, தீ வைத்து ...

ஜெயில் கதவு திறந்தாச்சு ; காற்றாக வருகிறார் நித்தியானந்தர்; ரூ. 3 லட்சம் பணத்துடன் கைது

சிம்லா ; நடிகையுடன் உல்லாசமாக இருந்த நித்தியானந்தர் இமாச்சல பிரதேசத்தில் ...

ஏர்.ஆர்.ரகுமானுக்கு அமெரிக்க கிராமி விருதுகள் : இந்தியர்களையும் - இறைவனையும் நினைவுகூர்ந்தார்

லாஸ்ஏஞ்சல்ஸ்: உலக அளவில் கலைஞர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ...

ரஞ்சிதா விவகாரம்! கையை பிசையும் நடிகர் சங்கம்!!

நடிகை ரஞ்சிதா, பிரபல சாமியார் நித்தியானந்தாவுடன் உல்லாசமாக இருக்கும் ...
Mankatha Official Website
செய்திகளை தேடு
Custom Search
Cute Babies
தேதி வாரியாக
Ads
Endhiran
A2Z Indian Ads
Trailer
ISD Number Search
சுட சுட செய்திகள்
Categories
Recent Posts

வட இந்தியாவில் கடுமையான நிலநடுக்கம்

சிக்கிம்: சிக்கிமில் கடுமையான நிலநடுக்கம் ...

ஆண் பிள்ளைகளுக்கு ஆபத்து என தெருவில் விளக்கேற்றும் பெண்கள்

திருவள்ளூர்: எருமையின் மீது புத்தாண்டு ...

மாணவியை தாக்கிய பயிற்சி ஆசிரியை மீது போலீசில் புகார்

ஆத்தூர் : ஆத்தூரை அடுத்த நாவுக்குறிச்சியைச் ...

எட்டாம் வகுப்பு தேர்வெழுதிய 60 வயது "இளசு'

திருப்பூர் : தாராபுரத்தை சேர்ந்த 60 வயது ...
Recent Comments
Great One... Those who are not an Indian are requested not to answer it.Really bollywood songs are becoming rocking day by day but
Hello... My life,vist it http://sylviaj.webgarden.com/ ,Thanks....
Hello... My life,vist it http://juhuacha.chefcuisto.com/2011/09/02/local-wedding-cakes/ ,Thanks....
Hello... My life,vist it http://juhuacha.chefcuisto.com/2011/09/02/local-wedding-cakes/ ,Thanks....
Hello... My life,vist it http://xiangcai.blogfa.com/post-1.aspx ,Thanks....
Tag Cloud