குவைத்தில் செந்தமிழ் சிலம்பு விழா செந்தமிழ்
குவைத் : குவைத் தமிழோசை கவிஞர் மன்றத்தின் சார்பில் மார்ச் 5ம் தேதியன்று மாலை 5.00 மணியளவில் ஹவல்லி அமெரிக்கன் இண்டர்நேஷனல் பள்ளி வளாகத்தில் செந்தமிழ் சிலம்பு விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. விழாவின் சிறப்பு அழைப்பாளர்களாக நாஞ்சில் சம்பத், நகைச்சுவை நடிகர்கள் செந்தில் மற்றும் குமரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர். சம்பத் தலைமையில், அழைப்போம் பாரதியை என்ற தலைப்பில் கவியரங்கம் நடத்தப்பட்டது. மேலும், நகைச்சுவை நடிகர்கள் செந்தில் மற்றும் குமரிமுத்து ஆகியோரின் நகைச்சுவை நிகழ்ச்சியும், பள்ளிச் சிறுமிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. விழாவின் நிறைவுரையாக நாஞ்சில் சம்பத், புகார் நகரம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
சேகர் வரவேற்புரை நிகழ்த்த, தேவி ரவி மற்றும் பிரமோத் ராஜன் ஆகியோர் விழாவினை தொகுத்த வழங்கினர். விழாவில் டி.வி.எஸ்.கார்கோ நிறுவனர் ஹைதர் அலி, டி.ஏ.டி நிறுவனர் பழனி பாலுச்சாமி மற்றும் பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவில் தமிழ் ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.






