காஷ்மீரில் 20 ஆண்டில் 820 மோதல்; 577 பயங்கரவாதிகள் , 173 பொதுமக்கள் பலி
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் கடந்த 20 ஆண்டில் பல்வேறு தொடர்பான 820 மோதல்கள் நடந்துள்ளன. இந்த மோதலில் 577 பயங்கரவாதிகள் ,பொதுகமக்கள் 173 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 1995 ல் மட்டும் 170 மோதல்கள் நடந்துள்ளன. இந்த தகவலை அம்மாநில உள்துறை வட்டாரம் வெளியிட்டுள்ள புள்ளி விவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் என்றாலே கலவரம் என்ற நிலைதான் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. கடந்த காலங்களில் பல்வேறு விஷயங்கள் தொடர்பாக இங்கு மோதல்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக அந்நிய நாட்டில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகள் எல்லை தாண்டி , புகுந்து நடத்திய சண்டைகளே அதிகம் என்றும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது.
இது தொடர்பான தகவல்கள் விவரம் வருமாறு: கடந்த 20 ஆண்டில் நடந்த மோதல்களில் பயங்கரவாதிகள், பொதுமக்கள் என 650 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 102 பயங்கரவாதிகள், பொதுமக்கள் 398 பேர் காயமுற்றுள்ளனர். இதில் எல்லை தாண்டிய தாக்குதல், பெண்கள் மற்றும் நிலம் தொடர்பான எழுந்த பிரச்னைகள் மோதலுக்கு காரணமாக இருந்திருக்கின்றன. 1995 ல் நடந்த 170 மோதல்களில் 108 பயங்கரவாதிகளும், பொதுமக்கள் 35 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். பயங்கரவாதிகள் 23 பேரும் , பொதுமக்கள் 57 பேரும் காயமுற்றுள்ளனர். 1994 ல் 110 பயஙகரவாதிகளும், 29 பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
பயங்கரவாதிகள் 15 பேர் , பொதுமக்கள் 47 பேர் காயமுற்றுள்ளனர். 1992 முதல் 1996 வரை நடந்த பல்வேறு மோதல்களில் 74 பயங்கரவாதிகளும், பொதுமக்கள் 30 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். 1992 ல் மட்டும் பயங்கரவாதிகள் 64 பேரும், 41 பேரும் காயமுற்றுள்ளனர் என புள்ளி விவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






