கட்டாய ஓட்டுப்பதிவு வந்தால் படித்தவர் ஓட்டளிப்பர்: அத்வானி
புதுடில்லி : "இந்திய ஜனநாயகம் தழைக்க கட்டாய ஓட்டுப்பதிவு அவசியம்' என, மூத்த பா.ஜ., தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார்.இணையதள "பிளாக்'கில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:இந்தியாவில் படிக்காதவர்களுடன் ஒப்பிடும் போது, படித் தவர்கள் ஓட்டுச்சாவடி மையங் களுக்கு சென்று ஓட்டளிப்பது பெருமளவில் குறைந்துவிட் டது.இது தொடர்பான ஆய்வு ஒன்று நடத்தப்படுமேயானால், பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, உயர்கல்வி படித்தவர்கள் மிகக் குறைந்த அளவிலேயே ஓட்டளித்திருப்பர் என, அதன் முடிவுகள் தெரிவிக்கும்.
ஓட்டளிப்பதைப் பொறுத்தவரை, இந்த சமுதாயத்தில் அடிமட்டத்தில் உள்ள மக்களுடன் ஒப்பிடுகையில், படித்தவர்களது சதவீதம் மிகவும் குறைவானதாகவே இருக்கும். இந்த நிலைமை தொடருமேயானால், அது நமது ஜனநாயகத்தின் தரத்தையே குலைத்து விடும். ஆனால், ஓட்டளிப்பது கட்டாயமாக்கப்படும் பட்சத்தில், இந்த குறைபாடுகளை சரி செய்ய முடியும். இதற்கு ஒரே வழியும், மிக எளிதான வழியுமாக நான் கருதுவது, குஜராத் முதல்வர் மோடியின் வழிமுறையேயாகும்.குஜராத் மாநிலத்தில் ஓட்டளிப்பது கட்டாயமாக்கப்பட் டுள்ளது. உள்ளாட்சி தேர்தலில் இது நடைமுறைப்படுத் தப்பட்டது.சட்டசபையிலும் இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
உலக நாடுகளை எடுத்துக் கொண்டால், ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, இத்தாலி, பிரேசில், மெக்சிகோ, துருக்கி, தாய் லாந்து மற்றும் சிங்கப்பூர் உட் பட 25 நாடுகளில் ஓட்டளிப்பது கட்டாயமாக்கப்பட் டுள்ளது.உலக அளவில் 70 கோடி மக்கள், கட்டாயமாக ஓட்டளிப்பவர்களாக இருக்கின்றனர் என்பதை பலர் அறிந்திருக்கவில்லை.மிகப் பெரிய ஜனநாயக நாடுகளான கனடா, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளிலும் ஓட்டளிப்பவர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துள்ளது. இதற்கு ஒரே மாற்று வழி, ஓட்டளிப்பதை கட்டாயமாக்குவது தான்.பிரிட்டனில் தேர்தல் விதிமுறைகளில் சீர்திருத்தம் செய் யப்பட்டுள்ளது. அது போலவே, இந்தியாவிலும் ஒரு மாற்று வழி கொண்டு வரப்பட வேண்டும்.பணபலத்துக்கு முன் எதையும் சாதித்து விட முடியாது என்ற பொதுவான கருத்தை, நம் மனங்களிலிருந்து நாம் அகற்ற வேண்டும்.இவ்வாறு அத்வானி தெரிவித்துள்ளார்.






