தொடர்கிறது மும்பையின் வெற்றி *பஞ்சாப் மீண்டும் தோல்வி

மும்பை: பஞ்சாப் அணிக்கு எதிரான பரபரப்பான லீக் போட்டியில் மும்பை அணி, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி வரை போராடிய பஞ்சாப் அணி, இத்தொடரின் ஆறாவது தோல்வியை சந்தித்துள்ளது.
இந்தியாவில் தற்போது மூன்றாவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் நடக்கிறது. இதன் 27வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. தடை காரணமாக சங்ககராவுக்குப் பதில் பஞ்சாப் அணியின் கேப்டனாக ஜெயவர்தனா செயல்பட்டார். "டாஸ்' வென்ற மும்பை கேப்டன் சச்சின், பீல்டிங் தேர்வு செய்தார். பஞ்சாப் அணிக்கு 2008 தொடரில் அசத்திய, ஆஸ்திரேலியாவின் ஷான் மார்ஷ் களமிறங்கினார்.
மார்ஷ் அரைசதம்:
பஞ்சாப் அணிக்கு இம்முறை போபரா (1), பிஸ்லா (11), கேப்டன் ஜெயவர்தனா (20) என துவக்கத்தில் யாரும் நிலைக்கவில்லை. இத்தொடரில் தொடர்ந்து சொதப்பும் யுவராஜ், 2 ரன்னில் அவுட்டாகி, மீண்டும் அதிர்ச்சி அளித்தார். இத்தொடரில் முதல் முறையாக களமிறங்கிய மார்ஷ், அரைசதம் கடந்தார்.
சபாஷ் மலிங்கா:
இந்நிலையில் இர்பான் பதான் (18), மார்ஷ் (57) இருவரும் மலிங்காவின் அடுத்தடுத்த பந்தில் அவுட்டாகினர். அடுத்து கோயலும் (1) சிக்க, தொடர்ந்து நான்கு பந்தில், 3 விக்கெட் வீழ்த்தி திருப்புமுனை ஏற்படுத்தினார். மறுமுனையில் பிரெட் லீ (3), விக்ரம்ஜீத் (6), பியுஸ் சாவ்லா (22) ஏமாற்ற, பஞ்சாப் அணி 20 ஓவரில் 163 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மலிங்கா 4, ஜாகிர் கான் 3 விக்கெட் வீழ்த்தினர்.
சச்சின் ஏமாற்றம்:
எட்டிவிடும் இலக்கை விரட்டிய மும்பை அணிக்கு சச்சின் (11) ஏமாற்றினார். பின் வந்த போலார்டு (20), இர்பான் வேகத்தில் வீழ்ந்தார். அரைசதம் கடந்த சிகர் தவான் (50), ராயுடு (9), பிராவோ (8) அடுத்தடுத்து அவுட்டாக, மும்பை அணிக்கு சிக்கல் ஏற்பட்டது.
மும்பை வெற்றி:
திவாரி 31 ரன்கள் எடுத்து ஸ்கோரை உயர்த்த உதவினார். கடைசி ஓவரில் மும்பை அணியின், வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்டது. முதல் 3 பந்துகளில் 5 ரன்கள் எடுக்கப்பட்டது. அடுத்து உதிரியாக ஒரு ரன் கிடைக்க, மும்பை அணி 19.3 ஓவரில், 6 விக்கெட்டுக்கு 164 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சதீஷ் 17, ஹர்பஜன் 1, ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். ஆட்ட நாயகனாக மலிங்கா தேர்வு செய்யப்பட்டார்.

சச்சினுக்கு ஆரஞ்ச் "கேப்'
மூன்றாவது ஐ.பி.எல்., தொடரில் இதுவரை நடந்துள்ள போட்டிகளில் மும்பை அணி கேப்டன் சச்சின், 7 போட்டிகளில் 314 ரன்கள் குவித்து முதலிடத்தில் <உள்ளார். இதையடுத்து நேற்று இவருக்கு "ஆரஞ்ச் கேப்' வழங்கப்பட்டது. அடுத்த இரு இடங்களில் பெங்களூருவின் காலிஸ் (6 போட்டி 310 ரன் ), ராஜஸ்தானின் யூசுப் பதான் (7 போட்டி, 250 ரன்) உள்ளனர்.

தொடர்ந்து சொதப்பும் யுவராஜ்
பஞ்சாப் அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட விரக்தியில் இருக்கும் யுவராஜ், இந்த தொடரில் தொடர்ந்து சொதப்புகிறார். கடந்த ஏழு போட்டிகளில் இவர் எடுத்த மொத்த ரன்கள் 101 (4, 9, 4, 43, 15, 24 மற்றும் 2) மட்டுமே.

ஸ்கோர் போர்டு
கிங்ஸ் லெவன் பஞ்சாப்
போபரா-எல்.பி.டபிள்யு.,(ப)ஜாகிர் 1(4)
மார்ஷ்(ப)மலிங்கா 57(47)
பிஸ்லா(கே)ஜாகிர்(ப)மலிங்கா 11(10)
ஜெயவர்தனா-ரன் அவுட்(மலிங்கா/ராயுடு) 20(18)
யுவராஜ்(கே)ஹர்பஜன்(ப)பிராவோ 2(3)
இர்பான்(கே)ஹர்பஜன்(ப)மலிங்கா 18(14)
பிரெட் லீ(கே)போலார்டு(ப)ஜாகிர் 3(3)
கோயல்(ப)மலிங்கா 1(3)
சாவ்லா-ரன் அவுட்(மெக்லாரென்) 22(13)
விக்ரம்ஜீத்(ப)ஜாகிர் 6(5)
ஸ்ரீவஸ்தவா-அவுட் இல்லை- 1(1)
உதிரிகள் 21
மொத்தம் (20 ஓவரில் ஆல் அவுட்) 163
விக்கெட் வீழ்ச்சி: 1-5(போபரா), 2-40(பிஸ்லா), 3-89(ஜெயவர்தனா), 4-92(யுவராஜ்), 5-124(இர்பான்), 6-124(மார்ஷ்), 7-129(பிரெட் லீ), 8-133(கோயல்), 9-150(விக்ரம்ஜீத்), 10-163(சாவ்லா).
பந்துவீச்சு: மெக்லாரென் 3-0-29-0, ஜாகிர் கான் 4-0-34-3, மலிங்கா 4-0-22-4, ஹர்பஜன் 4-0-26-0, போலார்டு 2-0-20-0, பிராவோ 3-0-22-1.
மும்பை இந்தியன்ஸ்
தவான்(கே)மார்ஷ்(ப)போபரா 50(40)
சச்சின்(கே)இர்பான்(ப)சாவ்லா 11(15)
போலார்டு(கே)போபரா(ப)இர்பான் 20(13)
திவாரி(கே)கோயல்(ப)போபரா 31(23)
ராயுடு(கே)யுவராஜ்(ப)ஸ்ரீவஸ்தவா 9(12)
பிராவோ(கே)+(ப)போபரா 8(4)
சதீஷ்-அவுட் இல்லை- 17(9)
ஹர்பஜன்-அவுட் இல்லை- 1(1)
உதிரிகள் 17
மொத்தம் (19.3 ஓவரில் 6 விக்.,) 164
விக்கெட் வீழ்ச்சி: 1-42(சச்சின்), 2-82(போலார்டு), 3-91(தவான்), 4-122(ராயுடு), 5-133(பிராவோ), 6-158(திவாரி).
பந்து வீச்சு: பிரெட் லீ 2.3-0-24-0, ஸ்ரீவஸ்தவா 4-0-27-1, இர்பான் 3-0-20-1, விக்ரம்ஜீத் 2-0-21-0, சாவ்லா 3-0-32-1, கோயல் 1-0-7-0, போபரா 4-0-31-3.

தொடர்கிறது பஞ்சாப் சோகம்
மும்பை அணிக்கு எதிரான தோல்வியை அடுத்து, பஞ்சாப் அணி, தொடர்ந்து கடைசி இடத்தில் உள்ளது.
அணி போட்டி வெற்றி தோல்வி புள்ளி ரன்ரேட்
மும்பை 7 6 1 12 +1.163
பெங்களூரு 6 4 2 8 +0.961
ராஜஸ்தான் 7 4 3 8 +0.112
டில்லி 7 4 3 8 -0.240
டெக்கான் 6 3 3 6 -0.369
கோல்கட்டா 7 3 4 6 --0.614
சென்னை 7 2 5 4 -0.190
பஞ்சாப் 7 1 6 2 -0.698
* மும்பை-பஞ்சாப் அணிகள் இடையிலான போட்டி வரை.

Related Posts with Thumbnails
Share and Enjoy:
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • Blogplay
  • Add to favorites
  • Diggita
  • LinkedIn
  • MySpace
  • Technorati
  • Tumblr
  • Twitter

Leave a Reply

You must be logged in to post a comment.

We will keep You Updated...
Sign up to receive breaking news
as well as receive other site updates!
Featured Video
Sponsors
Hot Topics

விடைத்தாள் மாயமான மாணவர்களுக்கு மறுதேர்வு : தேர்வு கடினம் என 'புலம்பல்'

முசிறி: முசிறியில், 262 விடைத்தாள் காணாமல் போன மாணவர்களுக்கு, நேற்று ...

மனைவியை எரித்து கொன்ற கணவருக்கு ஆயுள்

பெரியகுளம் : வரதட்சணை கேட்டு மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி, தீ வைத்து ...

ஜெயில் கதவு திறந்தாச்சு ; காற்றாக வருகிறார் நித்தியானந்தர்; ரூ. 3 லட்சம் பணத்துடன் கைது

சிம்லா ; நடிகையுடன் உல்லாசமாக இருந்த நித்தியானந்தர் இமாச்சல பிரதேசத்தில் ...

ஏர்.ஆர்.ரகுமானுக்கு அமெரிக்க கிராமி விருதுகள் : இந்தியர்களையும் - இறைவனையும் நினைவுகூர்ந்தார்

லாஸ்ஏஞ்சல்ஸ்: உலக அளவில் கலைஞர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ...

ரஞ்சிதா விவகாரம்! கையை பிசையும் நடிகர் சங்கம்!!

நடிகை ரஞ்சிதா, பிரபல சாமியார் நித்தியானந்தாவுடன் உல்லாசமாக இருக்கும் ...
Mankatha Official Website
செய்திகளை தேடு
Custom Search
Cute Babies
தேதி வாரியாக
Ads
Endhiran
A2Z Indian Ads
Trailer
ISD Number Search
சுட சுட செய்திகள்
Categories
Recent Posts

வட இந்தியாவில் கடுமையான நிலநடுக்கம்

சிக்கிம்: சிக்கிமில் கடுமையான நிலநடுக்கம் ...

ஆண் பிள்ளைகளுக்கு ஆபத்து என தெருவில் விளக்கேற்றும் பெண்கள்

திருவள்ளூர்: எருமையின் மீது புத்தாண்டு ...

மாணவியை தாக்கிய பயிற்சி ஆசிரியை மீது போலீசில் புகார்

ஆத்தூர் : ஆத்தூரை அடுத்த நாவுக்குறிச்சியைச் ...

எட்டாம் வகுப்பு தேர்வெழுதிய 60 வயது "இளசு'

திருப்பூர் : தாராபுரத்தை சேர்ந்த 60 வயது ...
Recent Comments
Great One... Those who are not an Indian are requested not to answer it.Really bollywood songs are becoming rocking day by day but
Hello... My life,vist it http://sylviaj.webgarden.com/ ,Thanks....
Hello... My life,vist it http://juhuacha.chefcuisto.com/2011/09/02/local-wedding-cakes/ ,Thanks....
Hello... My life,vist it http://juhuacha.chefcuisto.com/2011/09/02/local-wedding-cakes/ ,Thanks....
Hello... My life,vist it http://xiangcai.blogfa.com/post-1.aspx ,Thanks....
Tag Cloud