ஜெயில் கதவு திறந்தாச்சு ; காற்றாக வருகிறார் நித்தியானந்தர்; ரூ. 3 லட்சம் பணத்துடன் கைது

சிம்லா ; நடிகையுடன் உல்லாசமாக இருந்த நித்தியானந்தர் இமாச்சல பிரதேசத்தில் உள்ள சோலன் மலைப்பகுதியில் கைது செய்யப்பட்டார். ரூ. 3 லட்சம் ரொக்கப்பணமும், வெளிநாட்டுக்கு கொண்டு செல்லும் அமெரிக்க டாலருக்கான டிராவல்லர் செக்கும் இவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. இவர் இதன் மூலம் வெளிநாடு தப்பித்து செல்ல திட்டமிட்டிருந்தார் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட அவர் இமாச்சல பிரதேச கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு அவசர, அவசரமாக கர்நாடகா கொண்டு வருகின்றனர் போலீசார் .

தமிழக நடிகை ரஞ்சிதாவுடன் படுக்கையறையில் உல்லாசமாக இருந்த நித்தியானந்தரின் வீடியோ காட்சி ஒளிபரப்பானதும் இவர்களது பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து நாடு முழுவதும் உள்ள அவரது ஆசிரமங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. நான் சட்ட ரீதியாக எவ்வித தவறும் செய்யவில்லை.

நடந்தது என்ன என்பது குறித்து நான் விரைவில் மக்களுக்கு தெரிவிப்பேன் என்றார் ஆனால் அவர் எங்கும் ,யாருக்கும் காட்சி தரவில்லை. வாரணாசியில் நடக்கும் கும்பமேளாவில் பங்கேற்க சென்றிருக்கிறேன் நான் வருவேன் என்றார்.இது வரை வரவில்லை. தலைமறைவு வாழ்க்கை நடத்தி ஒசாமா பின்லாடன் பாணியில் வீடியோ பேட்டி மட்டும் இணையதளத்தில் வெளியிடப்பட்டு வந்தது. தியான பீட தலைமை பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

ஆனாலும் போலீசார் இவரை விட்டபாடில்லை. குறி வைத்துகொண்டே இருந்தனர். இந்நிலையில் நடிகையுடன் உல்லாசமாக இருந்தது மற்றும் ஆசிரமத்தில் நடந்த சட்ட விரோத செயல்கள் குறித்து தமிழக போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கர்நாடக போலீசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஜாமீ்ன் மறுப்பு : தொடர்ந்து கர்நாடக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஆசிரமத்தில் துருவி, துருவி, ஆதாரங்களை சேர்த்தனர். இந்நிலையில் தாம் கைது செய்யப்பட்டு விடுவோமோ என்ற அச்சத்தில் கோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தார். இங்கும் அவருக்கு ஆதரவு கதவு திறக்கவில்லை. இந்நிலையில் நித்தியானந்தா எங்கு இருக்கிறார் என கர்நாடக போலீசார் முகர்ந்து கொண்டிருந்தனர். இன்று இமாச்சல பிரதேசத்தில் பதுங்கி இருந்த நித்தியானந்தரை போலீசார் கைது செய்தனர்.

நடிகையுடன் உல்லாசமாக இருந்த அவரை இன்று இரவே கொண்டு வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்க திட்டமிட்டுள்ளனர். எனவே இவர் விமானத்தில் கொண்டு வரப்படலாம் என தெரிகிறது. ஆனாலும் இவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு போலீஸ் கஸ்டடியில் வைத்து தீவிர விசா‌ரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

நடிகை ரஞ்சிதா கைது எப்போது ? : நடிகையுடன் உல்லாசமாக இருந்ததே நித்தியானந்தரின் வழக்கில் முக்கிய குற்றமாக கருதப்டுகிறது. வழக்கு பதிவு செய்யப்பட்டு 45 நாட்கள் கழித்து ஒருவாறாக நித்தியானந்தரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் நடிகை ரஞ்சிதாவும் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ரஞ்சிதா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை கோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இப்போது எங்கே இருக்கிறார் என்பது தற்போதைய கேள்வி.

வீடியோ மூலம் நித்தியானந்தா சொன்னது என்ன ? : வீடியோவில் பேசியதாவது: நான் எந்த ஒரு தவறும் செய்யவில்லை.நானோ எனது தியான பீடமோ எவ்வித தவறான செயல்களிலும் ஈடுபடவில்லை. எனது சோதனையான இந்த காலக்கட்டத்தில் எனது சிஷ்யர்கள், எனது நல விரும்பிகள் எனக்கு உலகம் முழுவதும் பக்கப்பலமாக இருந்து வருகின்றனர். இந்த சோதனையான காலத்தில் வெளிநாடுகளில் இருந்து எனக்கு இ மெயில் மூலம் ஆதரவு தெரிவித்துள்ளனர். இவர்களுக்கு நான் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

நான் கடந்த பல ஆண்டுகளாக உலகம் முழுவதும் நல் வித்துக்களை பரப்பியுள்ளேன். இதன் காரணமாக எனக்கு இந்த ஆதரவு இருக்கிறது. ஆணித்தரமாக சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன். நான் சட்ட ரீதியான எவ்வித தவறும் செய்யவில்லை. எனது மீதான குற்றச்சாட்டுகள், வதந்திகள் ஆகிய எல்லாவற்றுக்கும் எனது ஆதாரங்கள் திரட்டி வருகிறேன். திரட்டிய பின்னர் நான் உங்கள் முன்பு திறந்து வைக்கிறேன் இவ்வாறு கூறியுள்ளார். இந்த வீடியோ சி.டி.,க்கள் தியான பீடத்தின் மூலமாக பல செய்தி நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இவர் மீது எந்த எந்த பிரிவுகளில் வழக்கு: நித்தியானந்தர் மீது பிடாதி போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட எஸ். பி., பிசனாகலி கூறியதாவது: சேலம் ஆத்தூரை சேர்ந்த லெனின் என்பவர் மூலம் தமிழக போலீசார் அனுப்பிய தகவல் படி நித்தியானந்தர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. செக்ஷன் 420 ( மோசடி ) , 376 ( கற்பழித்தல் ) , 377 ( முறையற்ற உடலுறவு ) , 506 ( பி ) (மிரட்டல்) , 120 ( பி) ( குற்ற செயல்களுக்கு உடந்தையாக இருத்தல் ) , 295 ( ஏ) , உள்ளிட்ட பிரிவின் கீழ் நித்தியானந்தர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Posts with Thumbnails
Share and Enjoy:
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • Blogplay
  • Add to favorites
  • Diggita
  • LinkedIn
  • MySpace
  • Technorati
  • Tumblr
  • Twitter

3 Responses to “ஜெயில் கதவு திறந்தாச்சு ; காற்றாக வருகிறார் நித்தியானந்தர்; ரூ. 3 லட்சம் பணத்துடன் கைது”

  • Tamilan:

    மற்ற போலி சாமியார்களுக்கு இது ஒரு பாடம். ஹிந்து மத நம்பிக்கைக்கு கேடு விளைவித்தவன் இவன். ஹிந்து மத மக்களுக்கு துரோகம் செய்தவன். தூக்கிலடவேண்டும்.

  • sekar:

    ஜெயிலுல சுய சரிதை எழுதுங்க , இன்னும் பெரியாளு ஆகிடுவீங்க … நீயெல்லாம் நாட்டுல இருக்க , பேச ,உரிமை இல்லடா.

  • easwaran:

    கதவை திற
    காற்று வரட்டும்
    வந்தது
    காவல் துறை
    enjoy kanna

    asti
    kashym
    suyam
    nityam

Leave a Reply

You must be logged in to post a comment.

We will keep You Updated...
Sign up to receive breaking news
as well as receive other site updates!
Featured Video
Sponsors
Hot Topics

விடைத்தாள் மாயமான மாணவர்களுக்கு மறுதேர்வு : தேர்வு கடினம் என 'புலம்பல்'

முசிறி: முசிறியில், 262 விடைத்தாள் காணாமல் போன மாணவர்களுக்கு, நேற்று ...

மனைவியை எரித்து கொன்ற கணவருக்கு ஆயுள்

பெரியகுளம் : வரதட்சணை கேட்டு மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி, தீ வைத்து ...

ஜெயில் கதவு திறந்தாச்சு ; காற்றாக வருகிறார் நித்தியானந்தர்; ரூ. 3 லட்சம் பணத்துடன் கைது

சிம்லா ; நடிகையுடன் உல்லாசமாக இருந்த நித்தியானந்தர் இமாச்சல பிரதேசத்தில் ...

ஏர்.ஆர்.ரகுமானுக்கு அமெரிக்க கிராமி விருதுகள் : இந்தியர்களையும் - இறைவனையும் நினைவுகூர்ந்தார்

லாஸ்ஏஞ்சல்ஸ்: உலக அளவில் கலைஞர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ...

ரஞ்சிதா விவகாரம்! கையை பிசையும் நடிகர் சங்கம்!!

நடிகை ரஞ்சிதா, பிரபல சாமியார் நித்தியானந்தாவுடன் உல்லாசமாக இருக்கும் ...
Mankatha Official Website
செய்திகளை தேடு
Custom Search
Cute Babies
தேதி வாரியாக
Ads
Endhiran
A2Z Indian Ads
Trailer
ISD Number Search
சுட சுட செய்திகள்
Categories
Recent Posts

வட இந்தியாவில் கடுமையான நிலநடுக்கம்

சிக்கிம்: சிக்கிமில் கடுமையான நிலநடுக்கம் ...

ஆண் பிள்ளைகளுக்கு ஆபத்து என தெருவில் விளக்கேற்றும் பெண்கள்

திருவள்ளூர்: எருமையின் மீது புத்தாண்டு ...

மாணவியை தாக்கிய பயிற்சி ஆசிரியை மீது போலீசில் புகார்

ஆத்தூர் : ஆத்தூரை அடுத்த நாவுக்குறிச்சியைச் ...

எட்டாம் வகுப்பு தேர்வெழுதிய 60 வயது "இளசு'

திருப்பூர் : தாராபுரத்தை சேர்ந்த 60 வயது ...
Recent Comments
Great One... Those who are not an Indian are requested not to answer it.Really bollywood songs are becoming rocking day by day but
Hello... My life,vist it http://sylviaj.webgarden.com/ ,Thanks....
Hello... My life,vist it http://juhuacha.chefcuisto.com/2011/09/02/local-wedding-cakes/ ,Thanks....
Hello... My life,vist it http://juhuacha.chefcuisto.com/2011/09/02/local-wedding-cakes/ ,Thanks....
Hello... My life,vist it http://xiangcai.blogfa.com/post-1.aspx ,Thanks....
Tag Cloud