பிளஸ் 2 இயற்பியல் பாடத்தில் 262 பேருக்கு இன்று மறுதேர்வு

சென்னை: பிளஸ் 2 இயற்பியல் விடைத்தாள்கள் மாயமான விவகாரத்தில் பாதிக்கப்பட்ட 262 மாணவர்களுக்கு இன்று மறுதேர்வு நடக்கிறது.

கடந்த மாதம் 8ம் தேதி முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் தேர்வெழுதியவர்களில் 262 மாணவர்களின் இயற்பியல் பாட விடைத்தாள்கள் அடங்கிய கட்டு, காணாமல் போனது. விடைத்தாள்கள் மாயமான விவகாரம் குறித்து, சட்டசபையில் கடந்த 8ம் தேதி பல்வேறு கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, விடைத்தாள் கிடைக்கவில்லை என்றால் மறுதேர்வு நடத்தப்படும்' என, பள்ளிக்கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். அன்று மாலையே, வரும் 22ம் தேதி மறுதேர்வு நடக்கும் என தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி அறிவித்திருந்தார். அதன்படி, இன்று காலை 10 மணிக்கு முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 இயற்பியல் மறுதேர்வு நடக்கிறது.

அய்யம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த பதிவெண் 469874 முதல் 469951 வரை (469879 தவிர) இடம் பெற்றுள்ள மாணவர்கள், தண்டலைப் புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த பதிவெண் 469968 முதல் 470052 (470045 தவிர) வரை இடம் பெற்றுள்ள மாணவர்கள் மற்றும் முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த பதிவெண் 470272 முதல் 470375 வரை (470274, 470308, 470342 எண்கள் தவிர்த்து) இடம் பெற்றுள்ள மாணவர்களும் இன்று நடக்கும் மறுதேர்வில் கலந்து கொள்கின்றனர்.

பாதிக்கப்பட்ட 262 மாணவர்கள் 44 நாட்கள் கழித்து மறுதேர்வு எழுதுவதால் கேள்வித்தாளில் உள்ள கேள்விகள் எளிமையாக இருக்கும் என சம்பந்தப்பட்ட மாணவர்களும், பெற்றோர்களும் எதிர்பார்க்கின்றனர். ஆனால், கேள்வித்தாள் எளிமையாக இருக்குமா? அல்லது வழக்கம் போல இருக்குமா? என்பது தேர்வு முடிந்த பின் தெரியவரும்.

Related Posts with Thumbnails
Share and Enjoy:
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • Blogplay
  • Add to favorites
  • Diggita
  • LinkedIn
  • MySpace
  • Technorati
  • Tumblr
  • Twitter

Leave a Reply

You must be logged in to post a comment.

We will keep You Updated...
Sign up to receive breaking news
as well as receive other site updates!
Featured Video
Sponsors
Hot Topics

விடைத்தாள் மாயமான மாணவர்களுக்கு மறுதேர்வு : தேர்வு கடினம் என 'புலம்பல்'

முசிறி: முசிறியில், 262 விடைத்தாள் காணாமல் போன மாணவர்களுக்கு, நேற்று ...

மனைவியை எரித்து கொன்ற கணவருக்கு ஆயுள்

பெரியகுளம் : வரதட்சணை கேட்டு மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி, தீ வைத்து ...

ஜெயில் கதவு திறந்தாச்சு ; காற்றாக வருகிறார் நித்தியானந்தர்; ரூ. 3 லட்சம் பணத்துடன் கைது

சிம்லா ; நடிகையுடன் உல்லாசமாக இருந்த நித்தியானந்தர் இமாச்சல பிரதேசத்தில் ...

ஏர்.ஆர்.ரகுமானுக்கு அமெரிக்க கிராமி விருதுகள் : இந்தியர்களையும் - இறைவனையும் நினைவுகூர்ந்தார்

லாஸ்ஏஞ்சல்ஸ்: உலக அளவில் கலைஞர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ...

ரஞ்சிதா விவகாரம்! கையை பிசையும் நடிகர் சங்கம்!!

நடிகை ரஞ்சிதா, பிரபல சாமியார் நித்தியானந்தாவுடன் உல்லாசமாக இருக்கும் ...
Mankatha Official Website
செய்திகளை தேடு
Custom Search
Cute Babies
தேதி வாரியாக
Ads
Endhiran
A2Z Indian Ads
Trailer
ISD Number Search
சுட சுட செய்திகள்
Categories
Recent Posts

வட இந்தியாவில் கடுமையான நிலநடுக்கம்

சிக்கிம்: சிக்கிமில் கடுமையான நிலநடுக்கம் ...

ஆண் பிள்ளைகளுக்கு ஆபத்து என தெருவில் விளக்கேற்றும் பெண்கள்

திருவள்ளூர்: எருமையின் மீது புத்தாண்டு ...

மாணவியை தாக்கிய பயிற்சி ஆசிரியை மீது போலீசில் புகார்

ஆத்தூர் : ஆத்தூரை அடுத்த நாவுக்குறிச்சியைச் ...

எட்டாம் வகுப்பு தேர்வெழுதிய 60 வயது "இளசு'

திருப்பூர் : தாராபுரத்தை சேர்ந்த 60 வயது ...
Recent Comments
Great One... Those who are not an Indian are requested not to answer it.Really bollywood songs are becoming rocking day by day but
Hello... My life,vist it http://sylviaj.webgarden.com/ ,Thanks....
Hello... My life,vist it http://juhuacha.chefcuisto.com/2011/09/02/local-wedding-cakes/ ,Thanks....
Hello... My life,vist it http://juhuacha.chefcuisto.com/2011/09/02/local-wedding-cakes/ ,Thanks....
Hello... My life,vist it http://xiangcai.blogfa.com/post-1.aspx ,Thanks....
Tag Cloud