விடைத்தாள் மாயமான மாணவர்களுக்கு மறுதேர்வு : தேர்வு கடினம் என ‘புலம்பல்’
முசிறி: முசிறியில், 262 விடைத்தாள் காணாமல் போன மாணவர்களுக்கு, நேற்று இயற்பியல் பாடத்துக்கான மறுதேர்வு நடந்தது. கடந்த முறை எழுதிய இயற்பியல் தேர்வை விட, இம்முறை வினாத்தாள் கடினமாக இருந்ததாக மாணவர்கள் புலம்பினர். கடந்த மார்ச் 8ம் தேதி முசிறி அரசு மேல்நிலைப்பள்ளியில், முசிறி அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 101 மாணவர்கள், தண்டலைப்புத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 84 மாணவர்கள், அய்யம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 77 மாணவர்கள் இயற்பியல் தேர்வெழுதினர். அவர்களின் விடைத்தாள்களுடன் பொருளியல் தேர்வெழுதிய ஐந்து மாணவர்களின் விடைத்தாள்களும் சேர்த்து ஒரு பார்சலில் கட்டப்பட்டது.
முசிறி தபால்துறை அலுவலகம் மூலம், அன்று மாலை பஸ்ஸில் திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்ட பார்சல் மாயமானது. 'இயற்பியல் பாடத்துக்கு மட்டும் வரும் 22ம் தேதி மறுதேர்வு நடத்தப்படும்' என்று தமிழக அரசு அறிவித்தது. அதையடுத்து, மறுதேர்வு நடத்துவதற்கான நடவடிக்கைகளில் திருச்சி மாவட்டக் கல்வித்துறை ஈடுபட்டது. மறுதேர்வுக்கு மாணவர்கள் தயாராக, அந்தந்த பள்ளிகளில் சிறப்பு வகுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த 17ம் தேதி முதல், அந்தந்த பள்ளிகளில் மாணவர்களுக்கு 'ஹால் டிக்கட்' வழங்கப்பட்டன.
முசிறி அரசு மேல்நிலைப்பள்ளியில், நேற்று காலை 8 மணியில் இருந்து மாணவர்கள் வரத் துவங்கினர். உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவின்படி, மாணவர்களுக்கு காலை 9 மணிக்கு கவுன்சலிங் வழங்கப்பட்டது. தமிழ்நாடு தேர்வுத்துறை இணை இயக்குனர் கருப்பசாமி, திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் ஆகியோர், தேர்வை பதட்டமில்லாமல் எதிர்கொள்வது; பதட்டத்தை தணிப்பதற்கான வழி; தேர்வறையில் ஒழுக்கத்துடன் எப்படி நடந்து கொள்வது? என்பது குறித்து மாணவர்களிடையே விளக்கினர். முசிறி தலைமையாசிரியர் கிருஷ்ணமூர்த்தி, அய்யம்பாளையம் கேத்தரின், தண்டலைபுதூர் லட்சுமிபதி ஆகியோர் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினார். அதைத்தொடந்து மாணவர்கள் தேர்வறைக்குச் சென்றனர். மொத்தம் 13 தேர்வறைகள் இருந்தது. 12 தேர்வறைகளில் 20 மாணவரும், ஒரு தேர்வறையில் 22 மாணவரும் உட்கார வைக்கப்பட்டனர். மாணவர்களை 20 தேர்வு கண்காணிப்பாளர்கள் மற்றும் இரண்டு பறக்கும்படையினர் கண்காணித்தனர். நேற்று 180 மாணவர், 82 மாணவிகள் என 262 பேரும் தேர்வெழுதினர். 10 மணிக்கு தேர்வு துவங்கியது. வினாத்தாளை படிக்க 10 நிமிடமும், விடைத்தாள் விவரங்களை நிரப்புவதற்கு 15 நிமிடமும் ஒதுக்கப்பட்டது. மதியம் ஒன்றேகால் மணிக்கு தேர்வு முடிந்தது.
தேர்வுக்குப்பின், தேர்வுத்துறை இணை இயக்குனர் கருப்பசாமி நிருபர்களிடம் கூறியதாவது: எதிர்பாராத சில சம்பவங்களினால் தற்போது மறுதேர்வு எழுதும் நிலை மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. வருங்காலத்தில் இதுபோன்ற தவறு நடக்காவண்ணம், அரசு அளிக்கும் ஆலோசனைப்படி செயல்படுவோம். முசிறியில் நடந்த மறுதேர்வு வினாத்தாள் அனைத்தும், தனிநபர் பாதுகாப்புடன் விடைத்தாள் திருத்தும் மையத்துக்கு அனுப்பி வைக்கப்படும். கடந்த மார்ச் தேர்வெழுதிய மாணவருக்கு தேர்வு முடிவு வெளியாகும் அன்றே, இம்மாணவர்களுக்கும் முடிவுகள் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மாணவர்கள் புலம்பல்: முசிறியில் நேற்று நடந்த இயற்பியல் பாடத்துக்கான மறுதேர்வு சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள் கூறினர். தேர்வு நடந்து கொண்டிருந்தபோது, திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன், 'ரவுண்ட்ஸ்' சென்றார். அப்போது எழுந்த, முசிறி அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த ஒரு மாணவர், 'வினாத்தாள் கடினமாக உள்ளது' என்றார். அதைக்கேட்ட அவர், 'அதற்கு நான் என்ன செய்ய?' என்று மறுகேள்வி கேட்டப்படியே நடையை கட்டினார். மறுதேர்வு குறித்து மாணவர்களிடம் கேட்டபோது, ''ஒரு மதிப்பெண், மூன்று மதிப்பெண், ஐந்து மதிப்பெண் கேள்விகள் எளிதாக இருந்தது. ஆனால், பத்து மதிப்பெண் கேள்விகள் கடினமாக இருந்தது. நாங்கள் சென்ற தேர்வில் பெற இருந்த மதிப்பெண்ணை விட, இத்தேர்வில் குறைவாகத்தான் பெறுவோம்,'' என்று புலம்பினர்.







Good points…I would note that as someone who really doesn’t comment to blogs much (in fact, this may be my first post), I don’t think the term “lurker” is very becoming to a non-posting reader. It’s not your fault really , but perhaps the blogosphere could come up with a better, non-creepy name for the 90% of us that enjoy reading the posts.
@chels I know what you mean, its hard to find good help these days. People now days just don’t have the work ethic they used to have. I mean consider whoever wrote this post, they must have been working hard to write that good and it took a good bit of their time I am sure. I work with people who couldn’t write like this if they tried, and getting them to try is hard enough as it is.
Great points…I would note that as someone who really doesn’t write on blogs much (in fact, this may be my first post), I don’t think the term “lurker” is very flattering to a non-posting reader. It’s not your fault at all, but perhaps the blogosphere could come up with a better, non-creepy name for the 90% of us that enjoy reading the content .
Hey, I think your really on focus with this, I won’t say I totally agree , but its not really that big of a deal .
I feel a lot more individuals should be required to read this, quite very good info.
Interesting , how would I use this?