சட்டசபையிலும், ‘பவர் கட்’
சென்னை: தமிழகம் முழுவதும் மின்வெட்டு பிரச்னை அனல் கிளப்பிக் கொண்டிருக்கும் வேளையில், சட்டசபையிலும் பவர்கட் ஏற்பட்டது உறுப்பினர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. சட்டசபையில் நேற்றைய விவாதத்தின் போது, காலை 9.54 மணிக்கு, நிருபர்கள் மற்றும் வி.ஐ.பி.,க்கள் அமரும் கேலரியில் திடீர் மின்தடை ஏற்பட்டது. முன்வரிசையில் இருந்த நிருபர்களுக்கு போதுமான வெளிச்சம் கிடைத்த நிலையில், மூன்றாவது வரிசையில் உள்ள நிருபர்கள் இருளில் எழுதுவதற்கு சிரமப்பட்டனர். 'தமிழகத்தையே உலுக்கும் மின்வெட்டு, சட்டசபை பக்கமும் வந்துவிட்டது' என, நிருபர்கள் முணுமுணுத்தனர். வி.ஐ.பி., கேலரியில் மிக முக்கியப் பிரமுகர்கள் யாரும் இல்லாததால் பரபரப்பு ஏதும் இல்லை. இந்த கேலரிக்கு, 18 நிமிட இடைவெளிக்கு பிறகு 10.12 மணிக்கு மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டது. மின்தடைக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.







[...] This post was mentioned on Twitter by Tamil News. Tamil News said: New Blog post சட்டசபையிலும், 'பவர் கட்' http://bit.ly/9ukZzy … [...]