நித்யானந்தா ஆணா, பெண்ணா பரிசோதிக்க போலீசார் முடிவு

பெங்களூரு : 'நடிகை ரஞ்சிதாவுடன் வீடியோவில் இருப்பது சாமியார் நித்யானந்தா தான்' என, ஐதராபாத்தில்உள்ள தடய அறிவியல் பரிசோதனை மையம் உறுதிபடுத்தியுள்ளது. 'நான் ஏதாவது தவறு செய்திருந்தால், என்னை தூக்கில் போடுங்கள்' என்று, நீதிமன்றத்தில் சாமியார் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், நித்யானந்தா ஆணா, பெண்ணா என்பதை கண்டறிய பரிசோதனை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

'நடிகை ரஞ்சிதாவுடன் இருப்பது நானல்ல. என், 'இமேஜை' பாழ்படுத்துவதற்காக கிராபிக்ஸ் செய்து வீடியோ காட்சி ஒளிபரப்பப்பட்டது' என்று சாமியார் கூறியிருந்தார். இதையடுத்து, ஐதராபாத்திலுள்ள தடயஅறிவியல் பரிசோதனை மையத்திற்கு நித்யானந்தா -நடிகை ரஞ்சிதா தொடர்பான வீடியோக்களை அனுப்பி பரிசோதனை செய்தனர். தற்போது, பரிசோதனை முடிவில், சம்பந்தப்பட்ட வீடியோவில் நடிகை ரஞ்சிதாவுடன் இருப்பது நித்யானந்தா தான் என்று தகவல் வெளியாகியுள்ளது. ரஞ்சிதாவிடம் விசாரணை நடத்தினால், பல தகவல்கள் வெளியாகும் என்று சி.ஐ.டி., போலீசார் கருதுதுகின்றனர். நடிகை ரஞ்சிதா மட்டுமின்றி, பல்வேறு பெண்களுடன் சாமியார் இருப்பது போன்ற, 'சிடி'க்களும் போலீசாரிடம் சிக்கியுள்ளன. இதையும் போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் ராம்நகர் நீதிமன்றத்தில் ஆஜரான நித்யானந்தா கூறுகையில், 'நான் ஏதாவது தவறு செய்திருந்ததாக நீதிமன்றம் கருதினால், என்னை தூக்கில் போடுங்கள்' என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையில், நித்யானந்தா ஆணா, பெண்ணா என்பதை கண்டறிய மருத்துவ பரிசோதனை செய்ய அனுமதிக்குமாறு ராம்நகர் நீதிமன்றத்தில், கர்நாடக சி.ஐ.டி., போலீசார் மனு தாக்கல் செய்யவுள்ளனர்.

கர்நாடக போலீஸ் பிடியில் ரஞ்சிதா? சாமியார் நித்யானந்தா வழக்கில் சிக்கியுள்ள நடிகை ரஞ்சிதாவிடம், கர்நாடக சி.ஐ.டி., போலீசார் நேற்று முன்தினம் இரவு துவக்கிய விசாரணையை நேற்றும் தொடர்ந்ததாக தகவல்கள் வெளியானது. ஆனால், 'ரஞ்சிதாவை அழைக்கவில்லை' என்று, கர்நாடக சி.ஐ.டி., டி.ஜி.பி. குரு பிரசாத் மறுத்துள்ளார். நித்யானந்தாவிடம் நடந்த விசாரணையின் போது, ரஞ்சிதா குறித்த தகவல்களை தெரிவித்து, அவருடைய போன் நம்பரையும் கர்நாடக போலீசாரிடம் கொடுத்துள்ளார். உடனடியாக சி.ஐ.டி., போலீசார் ரஞ்சிதாவை தொடர்பு கொண்டு, இரண்டு நாட்களுக்குள் பெங்களூரு வர வேண்டும், என்று கெடு விதித்தனர். அதற்கு ரஞ்சிதா, 'போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்கிறேன். விரைவில் பெங்களூரு வருகிறேன்' என்று கூறியிருந்ததாக, சி.ஐ.டி., போலீஸ் எஸ்.பி., யோகப்பா தெரிவித்திருந்தார்.

நித்யானந்தாவின் போலீஸ் காவல் இன்று முடிகிறது. அதற்குள், நடிகை ரஞ்சிதாவிடம் விசாரணையை முடித்து விட வேண்டும் என்று நடவடிக்கை எடுத்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவு, நடிகை ரஞ்சிதா பெங்களூரு வந்துள்ளதாகவும், அவரிடம், போலீசார் ரகசிய இடத்தில் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இந்த தகவல்களை போலீஸ் தரப்பில் உறுதிபடுத்த வில்லை. நேற்று காலை, ரஞ்சிதாவிடம் விசாரணை நடந்து வருகிறது என்று கூறிய போலீசார், மாலையில் அந்த தகவலை மறுத்து விட்டனர்.

இரண்டாவது முறையாக நீடிக்கப்பட்ட நித்யானந்தாவின் போலீஸ் காவல், இன்றுடன் முடிகிறது. இன்று மாலை அவர், ராம்நகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார். தன்னை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி, கடந்த 23ம் தேதி ராம்நகர் நீதிமன்றத்தில், நித்யானந்தா மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு விசாரணை நேற்று நடந்தது. அப்போது அரசு தரப்பில், சாமியார் நித்யானந்தா மீதான விசாரணை இன்னமும் முடியவில்லை. எனவே, அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது, என்று வாதிடப்பட்டது. இதையடுத்து, ஜாமீன் மனு மீதான விசாரணை, மே 3ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. பிடதி ஆசிரமத்தில் சந்தன கட்டைகள் இருந்தது தொடர்பான வழக்கு விசாரணையும் இன்று ஒத்தி வைக்கப்பட்டது.

Related Posts with Thumbnails
Share and Enjoy:
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • Blogplay
  • Add to favorites
  • Diggita
  • LinkedIn
  • MySpace
  • Technorati
  • Tumblr
  • Twitter

One Response to “நித்யானந்தா ஆணா, பெண்ணா பரிசோதிக்க போலீசார் முடிவு”

Leave a Reply

You must be logged in to post a comment.

We will keep You Updated...
Sign up to receive breaking news
as well as receive other site updates!
Featured Video
Sponsors
Hot Topics

விடைத்தாள் மாயமான மாணவர்களுக்கு மறுதேர்வு : தேர்வு கடினம் என 'புலம்பல்'

முசிறி: முசிறியில், 262 விடைத்தாள் காணாமல் போன மாணவர்களுக்கு, நேற்று ...

மனைவியை எரித்து கொன்ற கணவருக்கு ஆயுள்

பெரியகுளம் : வரதட்சணை கேட்டு மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி, தீ வைத்து ...

ஜெயில் கதவு திறந்தாச்சு ; காற்றாக வருகிறார் நித்தியானந்தர்; ரூ. 3 லட்சம் பணத்துடன் கைது

சிம்லா ; நடிகையுடன் உல்லாசமாக இருந்த நித்தியானந்தர் இமாச்சல பிரதேசத்தில் ...

ஏர்.ஆர்.ரகுமானுக்கு அமெரிக்க கிராமி விருதுகள் : இந்தியர்களையும் - இறைவனையும் நினைவுகூர்ந்தார்

லாஸ்ஏஞ்சல்ஸ்: உலக அளவில் கலைஞர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ...

ரஞ்சிதா விவகாரம்! கையை பிசையும் நடிகர் சங்கம்!!

நடிகை ரஞ்சிதா, பிரபல சாமியார் நித்தியானந்தாவுடன் உல்லாசமாக இருக்கும் ...
Mankatha Official Website
செய்திகளை தேடு
Custom Search
Cute Babies
தேதி வாரியாக
Ads
Endhiran
A2Z Indian Ads
Trailer
ISD Number Search
சுட சுட செய்திகள்
Categories
Recent Posts

வட இந்தியாவில் கடுமையான நிலநடுக்கம்

சிக்கிம்: சிக்கிமில் கடுமையான நிலநடுக்கம் ...

ஆண் பிள்ளைகளுக்கு ஆபத்து என தெருவில் விளக்கேற்றும் பெண்கள்

திருவள்ளூர்: எருமையின் மீது புத்தாண்டு ...

மாணவியை தாக்கிய பயிற்சி ஆசிரியை மீது போலீசில் புகார்

ஆத்தூர் : ஆத்தூரை அடுத்த நாவுக்குறிச்சியைச் ...

எட்டாம் வகுப்பு தேர்வெழுதிய 60 வயது "இளசு'

திருப்பூர் : தாராபுரத்தை சேர்ந்த 60 வயது ...
Recent Comments
Great One... Those who are not an Indian are requested not to answer it.Really bollywood songs are becoming rocking day by day but
Hello... My life,vist it http://sylviaj.webgarden.com/ ,Thanks....
Hello... My life,vist it http://juhuacha.chefcuisto.com/2011/09/02/local-wedding-cakes/ ,Thanks....
Hello... My life,vist it http://juhuacha.chefcuisto.com/2011/09/02/local-wedding-cakes/ ,Thanks....
Hello... My life,vist it http://xiangcai.blogfa.com/post-1.aspx ,Thanks....
Tag Cloud