முதல் ஆட்டத்திலேயே ஆப்கானிஸ்தான் அபாரம் : அயர்லாந்து ஏமாற்றம்
கயானா : 'டுவென்டி-20' உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் பயிற்சி போட்டியில், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் முதன்முதலில் காலடி வைத்துள்ள ஆப்கானிஸ்தான் அணி, 5 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தியது. வெஸ்ட் இண்டீசில், 3வது 'டுவென்டி-20' உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று துவங்குகிறது. இதற்காக கயானாவில் நடந்த பயிற்சி போட்டியில் ஆப்கானிஸ்தான், அயர்லாந்து அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் மங்கல், 'பீல்டிங்' தேர்வு செய்தார்.
மூனே ஆறுதல்: முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணிக்கு போர்டர்பீல்டு (0), ஸ்டிர்லிங் (6), நெயில் ஓபிரைன் (14), கசாக் (6), கெவின் ஓபிரைன் (3) ஏமாற்றம் அளித்தனர். பின்னர் களமிறங்கிய வில்சன் (32), மூனே (42) ஆறுதல் அளித்தனர். மற்ற வீரர்கள் ஏமாற்ற அயர்லாந்து அணி, 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 133 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தானின் அகமத்சாய் 4 விக்கெட் வீழ்த்தினார்.
ஸ்டானிக்சாய் நம்பிக்கை: எட்டக்கூடிய இலக்கை விரட்டிய ஆப்கானிஸ்தான் அணிக்கு நூர் அலி (14), கரிம் சாதிக் (14) சுமாரான துவக்கம் அளித்தனர். அடுத்து வந்த கேப்டன் மங்கல் (27), ஸ்டானிக்சாய் (39*), முகமது நபி (28) அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். ஆப்கானிஸ்தான் அணி 19.3 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 134 ரன்கள் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வெ.இண்டீஸ் அதிர்ச்சி: கயானாவில் நடந்த மற்றொரு பயிற்சி போட்டியில் தொடரை நடத்தும் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில், நியூசிலாந்து அணியிடம் அதிர்ச்சி தோல்வியடைந்து. மற்ற போட்டிகளில் தென் ஆப்ரிக்க அணி, 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது. இங்கிலாந்து அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியது.







[...] This post was mentioned on Twitter by Tamil News. Tamil News said: New Blog post முதல் ஆட்டத்திலேயே ஆப்கானிஸ்தான் அபாரம் : அயர்லாந்து ஏமாற்றம் http://bit.ly/9ChM5S … [...]