இந்திய புலனாய்வு துறை அதிகாரிகள் இன்று அமெரிக்கா பயணம்
புதுடில்லி: மும்பை தாக்குதல் தொடர்பாக அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி டேவிட் கோல்மென் ஹெட்லியிடம் விசாரிக்க நான்கு பேர் கொண்ட இந்திய குழுவினர் இன்று அமெரிக்கா செல்கின்றனர். கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதலில் நடத்தினர். இதில் 160பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு மூளையாக இருந்து செயல்பட்டவன் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதி ஹெட்லி. மும்பை தாக்குதலுக்கு முன்பு இந்தியாவில் வந்து, தாக்குதல் குறித்து சதி திட்டம் தீட்டியுள்ளான். இந்நிலையில் கடந்த ஆண்டு சிகாகோவில் அமெரிக்க புலாய்வு துறை போலீசார் இவனை கைது செய்தனர். அவனிடம் மேற்கொண்ட விசாரனையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின. இதனிடையே ஹெட்லியிடம் விசாரிக்க இந்திய சார்பில், அமெரிக்காவிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு அதிபர் ஒபாமா ஒப்புதல் அளித்தார். இதனையடுத்து அவனிடம் விசாரிக்க இந்திய புலனாய்வு துறை அதிகாரிகள் அடங்கிய நான்கு பேர் கொண்ட குழுவினர் இன்று அமெரிக்கா செல்ல உள்ளனர். அங்கு ஹெட்லியிடம் மேற்கொள்ளும் விசாரனை குறித்து அமெரிக்க அதிகாரிகளிடம் விளக்கம் அளிக்கின்றனர். பின்னர் ஓரிரு நாளில் பயங்கரவாதி ஹெட்லியிடம் இந்திய அதிகாரிகள் விசாரனை மேற்கொள்கின்றனர்.






