நெல்லையில் நர்சு கைது
திருநெல்வேலி : நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் தாருகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பரமேஸ்வரி (48). ராயகிரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக பணிபுரிகிறார். இவர் அக்கம்பக்கத்து ஊர்களில் தான் ஒரு டாக்டர் எனக் கூறிக் கொண்டு வைத்தியம் பார்த்து வந்தார். இவர் மீது மணிகண்டன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் பரமேஸ்வரியை கைது செய்தனர்.






