பா.ம.க.,வுக்கு சீட் இப்போது இல்லை : தி.மு.க., செயல்திட்டக் குழு பரபரப்பு

ராஜ்யசபா தேர்தலில் பா.ம.க., சார்பில் அன்புமணியை எம்.பி.,யாக்கும் முயற்சியை முறியடிக்கும் வகையில், தி.மு.க.,வின் உயர்நிலை செயல்திட்டக் குழு முடிவு எடுத்தது. பா.ம.க.,வுக்கு இந்த முறை கைவிரித்துள்ள தி.மு.க., அடுத்த சட்டசபை தேர்தலுக்கு பின் நடக்கும் ராஜ்யசபா தேர்தலில் ஒரு இடம் ஒதுக்குவதாக தெரிவித்துள்ளது. இதன்மூலம் கூட்டணியில் இருந்தால் தான் இடம் கிடைக்கும் என்ற நிலை பா.ம.க.,வுக்கு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு லோக்சபா தேர்தலின் போது, கூட்டணி மாறுவதற்காக தி.மு.க., அணியில் இருந்து பா.ம.க., வெளியேறியது. அப்போது, அ.தி.மு.க.,வுடன் தொகுதி ஒப்பந்தம் செய்த பா.ம.க., தங்களுக்கு 2010ல் ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்க வேண்டுமென ஒப்பந்தம் செய்தது. ஆனால், லோக்சபா தேர்தல் தோல்விக்கு பின், அ.தி.மு.க., - பா.ம.க., உறவில் விரிசல் ஏற்பட்டதால், ராஜ்யசபா சீட் ஒப்பந்தம் கேள்விக்குறியானது. "திரிசங்கு நிலை'யில் பா.ம.க., இருந்த நிலையில், தமிழகத்தில் காலியாகும் ஆறு ராஜ்யசபா எம்.பி., பதவிகளுக்கான மனு தாக்கல் இன்று துவங்குகிறது.

இதில், தி.மு.க.,விற்கு மூன்றும், அ.தி.மு.க.,விற்கு இரண்டும், காங்கிரசுக்கு ஒரு பதவியும் கிடைக்கவுள்ளது.தற்போது பதவி இழக்கும் எம்.பி.,க்களில் பா.ம.க., நிறுவனர் ராமதாசின் மகன் அன்புமணியும் ஒருவர். இவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும் என தி.மு.க.,விடம், பா.ம.க., தரப்பில் வலியுறுத்தப்பட்டது.சமீபத்தில் நடந்த பென்னாகரம் இடைத்தேர்தலில் தி.மு.க.,வை கடுமையாக விமர்சித்த பா.ம.க.,வினர், தேர்தல் முடிவிற்கு பிறகு நடந்த சட்டசபை கூட்டத்தொடரில், ஆளுங்கட்சியைப் பாராட்டத் துவங்கினர். துணை முதல்வர் ஸ்டாலின் பதவியேற்று ஓராண்டு ஆனதையொட்டி, பா.ம.க., எம்.எல்.ஏ., வேல்முருகன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் நேரடியாக முதல்வரைச் சந்திக்கவில்லை என்பதைத் தவிர, அனைத்து வழிகளிலும் ராஜ்யசபா எம்.பி., பதவியை பெற பா.ம.க., கடும் பிரயத்தனம் செய்தது.

இந்நிலையில், பா.ம.க.,விற்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கீடு மற்றும் ராஜ்யசபாவிற்கு வேட்பாளர்கள் தேர்வு செய்வதற்காக தி.மு.க., உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டம் முதல்வர் கருணாநிதி தலைமையில் கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை கூடியது. இரண்டு மணி நேரத்திற்கு மேல் நடந்த விவாதத்திற்கு பிறகு, உயர்நிலை செயல்திட்டக்குழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதில், "வரும் 2011 சட்டசபை தேர்தலை அடுத்து வரும் ராஜ்யசபா தேர்தலில் பா.ம.க.,விற்கு ஒரு இடம் அளிக்கப்படும். இதை பா.ம.க., ஏற்கும் என நம்புகிறோம்' எனத் தெரிவிக்கப்பட்டது.இதன் மூலம் தற்போது பா.ம.க.,விற்கு சீட் இல்லை என தி.மு.க., கைவிரித்துள்ளது. அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சட்டசபை தேர்தலின் போது கூட்டணியில் இருந்தால் மட்டுமே, அடுத்து வரும் ராஜ்யசபா தேர்தலில் பா.ம.க.,வுக்கு இடம் கிடைக்கும் என்ற கட்டாயம் உருவாகியுள்ளது.

பா.ம.க.,வுக்கு மட்டுமன்றி, காங்கிரசும், தி.மு.க., ஆதரவில் இன்னொரு இடத்தை பெறலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தது. அதற்கும் முடிவு கட்டும் வகையில், ராஜ்யசபாவிற்கு செல்லும் தி.மு.க., வேட்பாளர்கள் மூன்று பேரது பெயரும் கூட்ட முடிவில் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இப்போதைய ராஜ்யசபா தேர்தலில் பா.ம.க., இடம்பெற வாய்ப்பில்லை.

ராஜ்யசபா செல்பவர்கள்... : தி.மு.க., உயர்நிலை செயல்திட்டக் குழுவில், ராஜ்யசபா வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டது. அதன்படி, தி.மு.க., விவசாயிகள் அணிச் செயலர் கே.பி.ராமலிங்கம், அ.தி.மு.க.,வில் இருந்து சமீபத்தில் தி.மு.க.,விற்கு வந்த சேலம் செல்வகணபதி, சங்கரன்கோவில் தங்கவேலு ஆகிய மூவரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். ராமலிங்கம், செல்வகணபதி ஆகியோர் அ.தி.மு.க.,வில் இருந்தும், தங்கவேலு ம.தி.மு.க.,விற்கும் சென்று வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts with Thumbnails
Share and Enjoy:
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • Blogplay
  • Add to favorites
  • Diggita
  • LinkedIn
  • MySpace
  • Technorati
  • Tumblr
  • Twitter

Leave a Reply

You must be logged in to post a comment.

We will keep You Updated...
Sign up to receive breaking news
as well as receive other site updates!
Featured Video
Sponsors
Hot Topics

விடைத்தாள் மாயமான மாணவர்களுக்கு மறுதேர்வு : தேர்வு கடினம் என 'புலம்பல்'

முசிறி: முசிறியில், 262 விடைத்தாள் காணாமல் போன மாணவர்களுக்கு, நேற்று ...

மனைவியை எரித்து கொன்ற கணவருக்கு ஆயுள்

பெரியகுளம் : வரதட்சணை கேட்டு மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி, தீ வைத்து ...

ஜெயில் கதவு திறந்தாச்சு ; காற்றாக வருகிறார் நித்தியானந்தர்; ரூ. 3 லட்சம் பணத்துடன் கைது

சிம்லா ; நடிகையுடன் உல்லாசமாக இருந்த நித்தியானந்தர் இமாச்சல பிரதேசத்தில் ...

ஏர்.ஆர்.ரகுமானுக்கு அமெரிக்க கிராமி விருதுகள் : இந்தியர்களையும் - இறைவனையும் நினைவுகூர்ந்தார்

லாஸ்ஏஞ்சல்ஸ்: உலக அளவில் கலைஞர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ...

ரஞ்சிதா விவகாரம்! கையை பிசையும் நடிகர் சங்கம்!!

நடிகை ரஞ்சிதா, பிரபல சாமியார் நித்தியானந்தாவுடன் உல்லாசமாக இருக்கும் ...
Mankatha Official Website
செய்திகளை தேடு
Custom Search
Cute Babies
தேதி வாரியாக
May 2010
M T W T F S S
« Apr   Jun »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
Ads
Endhiran
A2Z Indian Ads
Trailer
ISD Number Search
சுட சுட செய்திகள்
Categories
Recent Posts

வட இந்தியாவில் கடுமையான நிலநடுக்கம்

சிக்கிம்: சிக்கிமில் கடுமையான நிலநடுக்கம் ...

ஆண் பிள்ளைகளுக்கு ஆபத்து என தெருவில் விளக்கேற்றும் பெண்கள்

திருவள்ளூர்: எருமையின் மீது புத்தாண்டு ...

மாணவியை தாக்கிய பயிற்சி ஆசிரியை மீது போலீசில் புகார்

ஆத்தூர் : ஆத்தூரை அடுத்த நாவுக்குறிச்சியைச் ...

எட்டாம் வகுப்பு தேர்வெழுதிய 60 வயது "இளசு'

திருப்பூர் : தாராபுரத்தை சேர்ந்த 60 வயது ...
Recent Comments
Great One... Those who are not an Indian are requested not to answer it.Really bollywood songs are becoming rocking day by day but
Hello... My life,vist it http://sylviaj.webgarden.com/ ,Thanks....
Hello... My life,vist it http://juhuacha.chefcuisto.com/2011/09/02/local-wedding-cakes/ ,Thanks....
Hello... My life,vist it http://juhuacha.chefcuisto.com/2011/09/02/local-wedding-cakes/ ,Thanks....
Hello... My life,vist it http://xiangcai.blogfa.com/post-1.aspx ,Thanks....
Tag Cloud