108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மீது தாக்குதல்
மதுரை: சோழவந்தான் தனியார் ஆஸ்பத்திரியில் 50 வயது ஆணின் உடல்நிலை மோசமாக உள்ளது என உறவினர்கள் 108 ஆம்புலன்ஸிற்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சோழவந்தான் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர் பின்னர்மேல் சிகிச்சைக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுமாறு108 ஆம்புலன்ஸ் ஊழியர்களிடம் கூறினர்.ஆனால் 108 ஊழியர்கள் விதிகளை கூறி சோழவந்தான் அரசு ஆம்புலன்சில் மதுரைக்கு கொண்டு செல்ல வலியுறுத்தினர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் 108 ஊழியர்களான டெக்னீசியன்கள் உட்பட 3 பேர் மீது தாக்குதல் நடத்தினர். சமயநல்லூர் டி.எஸ்.பி., சுருளிராஜா வசாரிக்கிறார்.






