ரயிலில் பெண் பயணியிடம் 90 சவரன் நகை கொள்ளை
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பார்வதிபுரத்தைச் சேர்ந்தவர் சேவியர் ராஜ்; இவரது மனைவி பிரமிஷா. கடந்த வாரம் இருவரும், சென்னையில் நடந்த உறவினர் இல்லத் திருமணத்திற்குச் சென்றனர்.அங்கிருந்து 25ம் தேதி, சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில், நாகர்கோவில் வந்தனர்.வீட்டுக்குச் சென்று பார்த்த போது, 90 சவரன் நகைகளை காணவில்லை. அதிர்ச்சியடைந்த அவர், நாகர்கோவில் ரயில்வே போலீசில் புகார் செய்தார்.அடையாளங்கள் கேட்டறிந்த போலீசார், நகைகள் வைத்திருந்த பெட்டியும், பேக்கும் அப்படியே இருக்கும்போது, நகைகள் மட்டும் எப்படி மாயமானது என, விசாரிக்கின்றனர்.






