பழநி உண்டியல் வசூல் ரூ.86 லட்சத்தை எட்டியது
பழநி; பழநி கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, மலைக்கோவில் மண்டபத்தில் எண்ணப்பட்டது. அதில்,ரொக்கம் 85 லட்சத்து 82 ஆயிரத்து 798 ரூபாய். தங்கம் 720 கிராம். வெள்ளி 9,562 கிராம். அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் கரன்சிகள் 631. தங்கத்தினால் ஆன 48 கிராம் எடையுள்ள தங்க கிரீடம் ஒன்றும், 362 கிராம் கிராம் எடையுள்ள வெள்ளி பாதங்கள் இரண்டும், ஒரு கிலோ 300 கிராம் எடையுள்ள வெள்ளி பார் ஒன்றும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. இந்த வசூல் 20 நாட்களில் கிடைத்ததாகும்.






