சச்சின் சதம்: இந்தியா பதிலடி!* இலங்கை திணறல் பந்துவீச்சு

கொழும்பு: கொழும்பு டெஸ்டில் சச்சின் சதம் அடிக்க, இந்திய அணி எழுச்சி கண்டது. சுரேஷ் ரெய்னாவும் பொறுப்பாக ஆடி நம்பிக்கை அளித்தார். இலங்கை அணியின் பந்துவீச்சு எதிர்பார்த்த அளவுக்கு அமையவில்லை.

இலங்கை சென்றுள்ள இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்டில் இலங்கை வென்றது. இரண்டாவது டெஸ்ட் கொழும்புவில் உள்ள எஸ்.எஸ்.சி., மைதானத்தில் நடக்கிறது.
முதல் இன்னிங்சில் இலங்கை அணி 4 விக்கெட்டுக்கு 642 ரன்கள் எடுத்து "டிக்ளேர்' செய்தது. பின் முதல் இன்னிங்சை துவக்கிய இந்திய அணி, 2ம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 95 ரன்கள் எடுத்திருந்தது.

நழுவிய சதம்:நேற்று 3ம் நாள் ஆட்டம் நடந்தது. சேவக், முரளிவிஜய் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை தொடர்ந்தது. நிதானமாக ஆடிய முரளிவிஜய், டெஸ்ட் அரங்கில் தனது 2வது அரைசதமடித்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 165 ரன்கள் சேர்த்த போது, ரந்திவ் சுழலில் "ஸ்டெம்பிங்' ஆன சேவக் (99), சதமடிக்கும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டார். முரளிவிஜய், 58 ரன்களுக்கு வெளியேறினார்.

அனுபவம் ஏமாற்றம்:அடுத்து வந்த அனுபவ வீரர் டிராவிட் (3), ரந்திவ் சுழலில் எல்.பி.டபிள்யு., முறையில் வெளியேறி ஏமாற்றினார். பின்னர் இணைந்த சச்சின், லட்சுமண் ஜோடி நிதானமாக ரன் சேர்த்தது. இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 68 ரன் சேர்த்த போது, மெண்டிஸ் சுழலில் எல்.பி.டபிள்யு., முறையில் லட்சுமண் (29) அவுட்டானார்.

சச்சின் அபாரம்:பின்னர் சுரேஷ் ரெய்னாவுடன் இணைந்த சச்சின், அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இலங்கை பந்துவீச்சை எளிதாக சமாளித்த இவர், டெஸ்ட் அரங்கில் தனது 48வது சதமடித்து தூள் கிளப்பினார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த ரெய்னா, தனது முதல் டெஸ்டில், முதல் அரைசதமடித்து அசத்தினார்.
மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி, 4 விக்கெட்டுக்கு 382 ரன்கள் எடுத்து, 260 ரன்கள் பின்தங்கி இருந்தது. சச்சின் (108), ரெய்னா (66) அவுட்டாகாமல் இருந்தனர்.
இலங்கை சார்பில் ரந்திவ், மெண்டிஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

சச்சின் "48'
இலங்கை அணிக்கு எதிரான நேற்றைய 3ம் நாள் ஆட்டத்தில், அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், டெஸ்ட் அரங்கில் தனது 48வது சதமடித்து அசத்தினார். இது இலங்கை அணிக்கு எதிராக இவர் அடித்த 9வது சதம். தவிர, கொழும்பு எஸ்.எஸ்.சி., மைதானத்தில் இவர் அடித்த 2வது சதம். முன்னதாக இங்கு கடந்த 1999ல் சதமடித்தார். சுமார் 11 ஆண்டுக்கு பின் மீண்டும் இங்கு சதமடித்து சாதித்துள்ளார்.
* இதுவரை 168 டெஸ்ட் போட்டியில் பங்கேற்று 48 சதம், 55 அரைசதம் உட்பட 13647 ரன்கள் எடுத்துள்ளார். இதன்மூலம் டெஸ்ட் அரங்கில், அதிக போட்டியில் விளையாடிய வீரர்கள் வரிசையில், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் வாக் சாதனையை சமன் செய்தார் சச்சின். இருவரும் தலா 168 டெஸ்ட் போட்டியில் விளையாடி உள்ளனர்.

தேவை 61 ரன்கள்
முதல் இன்னிங்சில் 241 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்த இந்திய அணி, "பாலோ-ஆனை' தவிர்க்குமா என்ற இக்கட்டான நிலையில் இருந்தது. பின் சச்சின், ரெய்னா ஜோடி, பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 3ம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுக்கு 382 ரன்களுக்கு கொண்டு சென்றது. இன்னும் 61 ரன்கள் எடுத்தால், "பாலோ-ஆனை' எளிதில் தவிர்க்கலாம்.

தவறான "ஷாட்': சேவக்
சேவக் கூறுகையில், ""ஒரு ரன்னில் சதமடிக்கும் வாய்ப்பை இழந்தது வருத்தம் அளிக்கிறது. இதற்கு எனது தவறான "ஷாட்' முக்கிய காரணம். முதல் இன்னிங்சில் சச்சின், லட்சுமண் சதமடிப்பார்கள் என நினைத்தேன். ஆனால் துரதிருஷ்டவசமாக லட்சுமண் விரைவில் அவுட்டானது ஏமாற்றம் அளிக்கிறது. இன்றைய 4ம் நாள் ஆட்டத்தில் இந்திய "மிடில்-ஆர்டர்' பேட்ஸ்மேன்கள் கைகொடுப்பார்கள்,'' என்றார்.

மெண்டிசை சமாளிப்பது எளிது
சச்சின் கூறுகையில்,"" கடந்த முறை மெண்டிஸ் சுழலில், இந்திய வீரர்கள் திணறினர். இம்முறை எளிதாக சமாளித்து விட்டனர். ரந்திவும் சுழலில் சிறப்பாக செயல்படுகிறார். இவர்கள், முரளிதரன் இடத்தை நிரப்புவது கடினம். இதற்கு கடுமையாக போராட வேண்டும்,'' என்றார்.

ஸ்கோர் போர்டு

முதல் இன்னிங்ஸ்

இலங்கை 642/4 ("டிக்ளேர்')

இந்தியா
முரளிவிஜய் எல்.பி.டபிள்யு.,(ப)மெண்டிஸ் 58(124)
சேவக் (ஸ்டெம்)பிரசன்னா (ப)ரந்திவ் 99(101)
டிராவிட் எல்.பி.டபிள்யு.,(ப)ரந்திவ் 3(18)
சச்சின் -அவுட் இல்லை- 108(181)
லட்சுமண் எல்.பி.டபிள்யு.,(ப)மெண்டிஸ் 29(98)
ரெய்னா -அவுட் இல்லை- 66(133)
உதிரிகள் 19
மொத்தம் (108 ஓவரில், 4 விக்.,) 382
விக்கெட் வீழ்ச்சி: 1-165(சேவக்), 2-169(முரளிவிஜய்), 3-173(டிராவிட்), 4-241(லட்சுமண்).
பந்து வீச்சு: பிரசாத் 10-0-53-0, பெர்ணான்டோ 21-0-83-0, மாத்யூஸ் 9-1-24-0, ரந்திவ் 35-11-108-2, மெண்டிஸ் 26-2-92-2, தில்ஷன் 7-1-16-0.

Related Posts with Thumbnails
Share and Enjoy:
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • Blogplay
  • Add to favorites
  • Diggita
  • LinkedIn
  • MySpace
  • Technorati
  • Tumblr
  • Twitter

Leave a Reply

You must be logged in to post a comment.

We will keep You Updated...
Sign up to receive breaking news
as well as receive other site updates!
Featured Video
Sponsors
Hot Topics

விடைத்தாள் மாயமான மாணவர்களுக்கு மறுதேர்வு : தேர்வு கடினம் என 'புலம்பல்'

முசிறி: முசிறியில், 262 விடைத்தாள் காணாமல் போன மாணவர்களுக்கு, நேற்று ...

மனைவியை எரித்து கொன்ற கணவருக்கு ஆயுள்

பெரியகுளம் : வரதட்சணை கேட்டு மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி, தீ வைத்து ...

ஜெயில் கதவு திறந்தாச்சு ; காற்றாக வருகிறார் நித்தியானந்தர்; ரூ. 3 லட்சம் பணத்துடன் கைது

சிம்லா ; நடிகையுடன் உல்லாசமாக இருந்த நித்தியானந்தர் இமாச்சல பிரதேசத்தில் ...

ஏர்.ஆர்.ரகுமானுக்கு அமெரிக்க கிராமி விருதுகள் : இந்தியர்களையும் - இறைவனையும் நினைவுகூர்ந்தார்

லாஸ்ஏஞ்சல்ஸ்: உலக அளவில் கலைஞர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ...

ரஞ்சிதா விவகாரம்! கையை பிசையும் நடிகர் சங்கம்!!

நடிகை ரஞ்சிதா, பிரபல சாமியார் நித்தியானந்தாவுடன் உல்லாசமாக இருக்கும் ...
Mankatha Official Website
செய்திகளை தேடு
Custom Search
Cute Babies
தேதி வாரியாக
July 2010
M T W T F S S
« Jun   Aug »
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Ads
Endhiran
A2Z Indian Ads
Trailer
ISD Number Search
சுட சுட செய்திகள்
Categories
Recent Posts

வட இந்தியாவில் கடுமையான நிலநடுக்கம்

சிக்கிம்: சிக்கிமில் கடுமையான நிலநடுக்கம் ...

ஆண் பிள்ளைகளுக்கு ஆபத்து என தெருவில் விளக்கேற்றும் பெண்கள்

திருவள்ளூர்: எருமையின் மீது புத்தாண்டு ...

மாணவியை தாக்கிய பயிற்சி ஆசிரியை மீது போலீசில் புகார்

ஆத்தூர் : ஆத்தூரை அடுத்த நாவுக்குறிச்சியைச் ...

எட்டாம் வகுப்பு தேர்வெழுதிய 60 வயது "இளசு'

திருப்பூர் : தாராபுரத்தை சேர்ந்த 60 வயது ...
Recent Comments
Great One... Those who are not an Indian are requested not to answer it.Really bollywood songs are becoming rocking day by day but
Hello... My life,vist it http://sylviaj.webgarden.com/ ,Thanks....
Hello... My life,vist it http://juhuacha.chefcuisto.com/2011/09/02/local-wedding-cakes/ ,Thanks....
Hello... My life,vist it http://juhuacha.chefcuisto.com/2011/09/02/local-wedding-cakes/ ,Thanks....
Hello... My life,vist it http://xiangcai.blogfa.com/post-1.aspx ,Thanks....
Tag Cloud