மழை வேண்டி 1,008 குடம் அணை நீரால் அபிஷேகம்
சத்தியமங்கலம்: மழை வேண்டி, பவானிசாகர் அணையில் இருந்து 1,008 குடம் தண்ணீர் எடுத்து வந்து, அணையின் மேல் இருக்கும் விநாயகருக்கு அபிஷேகம் நடந்தது.ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகிலுள்ள பவானிசாகர் அணை, தமிழகத்தின் இரண்டாவது பெரிய அணை. ஈரோடு, கரூர் மாவட்டங்களில் 2.5 ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது. ஆண்டுதோறும், ஜூன், ஜூலை மாதங்களில் நீலகிரி மற்றும் கேரள மலைப்பகுதியில் பெய்யும் மழை நீரால், அணை நிரம்புகிறது.
நடப்பாண்டு பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் போதிய மழை பெய்யாததால், அணைக்கு சொற்ப அளவு தண்ணீரே வருகிறது. அதேவேளை, அணையில் இருந்து, தடப்பள்ளி, அரக்கன்கோட்டை மற்றும் காலிங்கராயன் பாசன கால்வாய்களில் திறந்துவிடப்படும் தண்ணீர் அளவு அதிகரிப்பதால், அணையில் நீர்மட்டம் நாளுக்கு நாள் கீழ்நோக்கி சென்று கொண்டுள்ளது.வழக்கமாக ஆகஸ்ட் மாதம் அணை நிரம்பி, 1.5 லட்சம் ஏக்கர் பாசனம் கொண்ட கீழ்பவானி கால்வாய்க்கு ஆகஸ்ட் 15ம் தேதி நீர் திறக்க வேண்டும். சென்றாண்டு இதேநேரத்தில், பவானிசாகர் அணை நீர்மட்டம் 79.82 அடியாக இருந்தது. 16 டி.எம்.சி., தண்ணீர் இருந்தது. நேற்று, அணையின் நீர்மட்டம் 73.25 அடியாக உள்ளது. 12.4 டி.எம்.சி., தண்ணீர் மட்டுமே உள்ளது.அணையில் நீர்மட்டம் குறைவாக இருக்கும் காலங்களில், அணையின் மேற்பகுதியில் இருக்கும், ஸ்ரீசாகர் விநாயகருக்கு, 1,008 குடம் அணை நீரால் பொதுப்பணித்துறையினர் அபிஷேகம் செய்வர். சென்றாண்டும் அபிஷேகம் நடந்தது; 2.5 லட்சம் கன அடி தண்ணீர் வரத்தாகி, பவானிசாகர் அணை வரலாற்று சாதனை படைத்தது.
நேற்றும், 1,008 குடம் அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. காலை 9 மணிக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அணையில் குவிந்தனர். அணைக்குள் இருந்து மேல் மட்டம் வரை வரிசையாக நின்று, அணை நீரை குடங்களில் ஒருவர் கை மாற்றி ஒருவர் எடுத்து வந்தனர். ஸ்ரீசாகர் விநாயகருக்கு 1,008 குடம் அபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது. அப்போது, அணைப்பகுதியில் சாரல் மழை பெய்தது பக்தர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
பவானிசாகர் எம்.எல்.ஏ., சுப்பிரமணியம் பூஜையை துவக்கி வைத்தார். கோவை மண்டல பொதுப்பணித்துறை தலைமை இன்ஜினியர் பஞ்சநாதன், கண்காணிப்பு பொறியாளர் சம்பத்குமார், பவானிசாகர் அணை செயற்பொறியாளர் வெங்கடாசலம், உதவி கோட்டப் பொறியாளர்கள் ராதாகிருஷ்ணன், ராஜூ மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.







Thank you for share very good knowledges. Your blog is goodI am impressed by the information that you have on this blog. It shows how well you understand this subject. Bookmarked this page, will come back for more. You, my friend, ROCK! I found just the information I already searched everywhere and just couldn’t find. What a perfect site. Like this website your website is one of my new favs.I like this website shown and it has given me some sort of inspiration to have success for some reason, so thank you