இரண்டாவது டெஸ்ட் “டிரா’

கொழும்பு: இந்தியா, இலங்கை அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டி, எதிர்பார்த்தது போல "டிரா' ஆனது.
இலங்கை சென்றுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இலங்கை வென்றது. இரண்டாவது டெஸ்ட், கொழும்புவில் உள்ள எஸ்.எஸ்.சி., மைதானத்தில் நடந்தது.
முதல் இன்னிங்சில் இலங்கை அணி 4 விக்கெட்டுக்கு 642 ரன்கள் எடுத்து "டிக்ளேர்' செய்தது. பின்னர் முதல் இன்னிங்சை துவக்கிய இந்திய அணி, 4ம் நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட்டுக்கு 669 ரன்கள் எடுத்திருந்தது.
முன்னிலை "65':
நேற்று 5வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. முதல் இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணிக்கு இஷாந்த் சர்மா (27) ஆறுதல் அளித்தார். இதன்மூலம் 707 ரன்களுக்கு "ஆல்-அவுட்' ஆன இந்திய அணி, முதல் இன்னிங்சில் 65 ரன்கள் முன்னிலை பெற்றது. பிரக்யான் ஓஜா (18) அவுட்டாகாமல் இருந்தார்.
இலங்கை சார்பில் மெண்டிஸ் அதிகபட்சமாக 4 விக்கெட் வீழ்த்தினர்.
சங்ககரா அபாரம்:
பின்னர் 2வது இன்னிங்சை துவக்கிய இலங்கை அணிக்கு தில்ஷன் (14), மிதுன் வேகத்தில் வெளியேறி ஏமாற்றினார். பின்னர் ஹர்பஜன் சுழலில் சிக்கிய பரணவிதனா (34) நிலைக்கவில்லை. அடுத்து வந்த மகிலா ஜெயவர்தனா (5) கைகொடுக்கவில்லை. இலங்கை அணி 2வது இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 129 ரன்கள் எடுத்திருந்த போது, இரு அணி கேப்டன்களும் 5ம் நாள் ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக தெரிவித்தனர். இதனால் இப்போட்டி "டிரா' ஆனது. சங்ககரா (42), சமரவீரா (10) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் அபிமன்யு மிதுன், சேவக், ஹர்பஜன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
பேட்டிங்கில் அசத்திய இலங்கை கேப்டன் சங்ககரா, ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இவ்விரு அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, வரும் ஆகஸ்ட் 3ம் தேதி கொழும்புவில் உள்ள பி.எஸ்.எஸ்., மைதானத்தில் துவங்குகிறது.
பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம்
கொழும்புவில், இந்தியா-இலங்கை அணிகள் மோதிய 2வது டெஸ்டில், இரு அணி பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தினர். இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இலங்கை 642/4 ("டிக்ளேர்'), இந்தியா 707/10, 2வது இன்னிங்சில் இலங்கை 129/3 ரன்கள் எடுத்தன. இப்போட்டியில் இரு அணி பேட்ஸ்மேன்கள் இணைந்து 2 இரட்டை சதம், 3 சதம், 5 அரைசதம் உட்பட மொத்தம் 1478 ரன்கள் எடுத்துள்ளனர். இதன்மூலம் இம்மைதானத்தில் அதிக பட்ச ஸ்கோரை பதிவு செய்த அணிகள் என்ற சாதனை படைத்தன. முன்னதாக கடந்த 1992ல் இலங்கை-ஆஸ்திரேலியா அணிகள் மோதிய டெஸ்டில், மொத்தம் 1438 ரன்கள் எடுக்கப்பட்டன.
* இப்போட்டியில் இரு அணி பவுலர்களும் விக்கெட் வீழ்த்த முடியாமல் திணறினர். இரு அணி பவுலர்கள் இணைந்து மொத்தம் 17 விக்கெட் மட்டுமே வீழ்த்தினர். இதில் குறிப்பாக இந்தியாவின் இஷாந்த், ஹர்பஜன், பிரக்யான் ஓஜா உள்ளிட்டோர் பவுலிங்கில் ஏமாற்றினர்.
தொடர்ந்து "நம்பர்-1'
கொழும்பு டெஸ்டை "டிரா' செய்த இந்திய அணி "நம்பர்-1' இடத்தில் நீடிக்கலாம். மூன்றாவது டெஸ்டின் முடிவை பற்றி கவலைப் படத் தேவையில்லை.
டெஸ்ட் ரேங்கிங் பட்டியலில், தற்போது இந்திய அணி 130 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இலங்கை அணி 111 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது.
மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி வெற்றி பெற்றாலும், தொடரை கைப்பற்ற இயலாது. இதனால் 127 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கும். இலங்கை அணி 115 புள்ளிகளுடன் 3வது இடத்துக்கு முன்னேறும். "டிரா' செய்யும் பட்சத்தில் 124 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்க வைத்துக் கொள்ளும். இலங்கை அணி 119 புள்ளிகளுடன் 3வது இடத்துக்கு முன்னேறும். ஒருவேளை இந்தியா தோல்வி அடையும் பட்சத்தில் 122 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடரும். இலங்கை அணி 121 புள்ளிகளுடன், 2வது இடத்துக்கு முன்னேறும்.
2வது அதிகபட்சம்
இலங்கை அணிக்கு எதிராக முதல் இன்னிங்சில் 707 ரன்கள் குவித்த இந்திய அணி, டெஸ்ட் அரங்கில் தனது 2வது அதிகபட்ச ஸ்கோரை பெற்றது. முன்னதாக கடந்த 2009ல் இலங்கை அணிக்கு எதிராக மும்பையில் நடந்த டெஸ்ட் போட்டியில், இந்திய அணி அதிகபட்சமாக 9 விக்கெட்டுக்கு 726 ரன்கள் எடுத்து "டிக்ளேர்' செய்தது.
தவிர, அந்நிய மண்ணில் இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். முன்னதாக கடந்த 2004ல் சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த டெஸ்டில், இந்திய அணி 7 விக்கெட்டுக்கு 705 ரன்கள் எடுத்து "டிக்ளேர்' செய்தது.
வயது ஒரு தடையல்ல: சச்சின்
இந்திய வீரர் சச்சின் கூறுகையில், ""டெஸ்ட் அரங்கில் 5வது முறையாக இரட்டை சதம் கடந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. மனது மற்றும் உடல் ஒத்துழைக்கும் பட்சத்தில், நீண்ட காலம் கிரிக்கெட் போட்டியில் விளையாடலாம். திறமை உள்ளவர்களுக்கு வயது ஒரு தடையாக இருக்காது. இப்போட்டியில் சுரேஷ் ரெய்னா நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார். இவரது கூட்டணி, இரட்டை சதமடிக்க முக்கிய காரணமாக விளங்கியது. சேவக்கின் சிறப்பான துவக்கம், இலங்கை அணியின் வலுவான இலக்கை "சேஸ்' செய்ய வழிவகுத்தது,'' என்றார்.
ஆடுகளம் சரியில்லை: தோனி
இந்திய கேப்டன் தோனி கூறுகையில், ""பொதுவாக டெஸ்ட் போட்டி "டிரா'வில் முடிவதை யாரும் விரும்பமாட்டார்கள். டெஸ்ட் போட்டியில் பவுலர், பேட்ஸ்மேன்களுக்கு இடையே மோதல் இருந்தால்தான் சுவாரஸ்யமாக இருக்கும். இதுபோன்ற "பிட்ச்' டெஸ்ட் போட்டியின் ஆர்வத்தை குறைத்துவிடும். இரண்டாவது இன்னிங்சில் எங்கள் சுழற்பந்துவீச்சாளர்கள் எழுச்சி கண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இது அடுத்து வரும் போட்டிகளில் தொடர்ந்தால் நல்லது,'' என்றார்.
ஸ்கோர் போர்டு
முதல் இன்னிங்ஸ்
இலங்கை 642/4 ("டிக்ளேர்')
இந்தியா
முரளிவிஜய் எல்.பி.டபிள்யு.,(ப)மெண்டிஸ் 58(124)
சேவக் (ஸ்டெம்)பிரசன்னா (ப)ரந்திவ் 99(101)
டிராவிட் எல்.பி.டபிள்யு.,(ப)ரந்திவ் 3(18)
சச்சின் (கே)பிரசன்னா (ப)தில்ஷன் 203(347)
லட்சுமண் எல்.பி.டபிள்யு.,(ப)மெண்டிஸ் 29(98)
ரெய்னா (கே)சங்ககரா (ப)மெண்டிஸ் 120(228)
தோனி (கே)+(ப)தில்ஷன் 76(138)
ஹர்பஜன் (கே)சங்ககரா (ப)தில்ஷன் 0(2)
மிதுன் (ப)மெண்டிஸ் 41(97)
இஷாந்த் (கே)சங்ககரா (ப)பெர்ணான்டோ 27(117)
பிரக்யான் -அவுட் இல்லை- 18(92)
உதிரிகள் 33
மொத்தம் (225.2 ஓவரில், "ஆல்-அவுட்') 707
விக்கெட் வீழ்ச்சி: 1-165(சேவக்), 2-169(முரளிவிஜய்), 3-173(டிராவிட்), 4-241(லட்சுமண்), 5-497(ரெய்னா), 6-592(சச்சின்), 7-592(ஹர்பஜன்), 8-643(தோனி), 9-668(மிதுன்), 10-707(இஷாந்த்).
பந்துவீச்சு: பிரசாத் 22-2-101-0, பெர்ணான்டோ 31.2-1-116-1, மாத்யூஸ் 9-1-24-0, ரந்திவ் 73-16-222-2, மெண்டிஸ் 63-10-172-4, தில்ஷன் 27-6-56-3.
இரண்டாவது இன்னிங்ஸ்
இலங்கை
பரணவிதனா (கே)லட்சுமண் (ப)ஹர்பஜன் 34(62)
தில்ஷன் (கே)இஷாந்த் (ப)மிதுன் 14(21)
சங்ககரா -அவுட் இல்லை- 42(114)
ஜெயவர்தனா எல்.பி.டபிள்யு.,(ப)சேவக் 5(34)
சமரவீரா -அவுட் இல்லை- 10(46)
உதிரிகள் 24
மொத்தம் (45 ஓவர், 3 விக்., "டிக்ளேர்') 129
விக்கெட் வீழ்ச்சி: 1-50(தில்ஷன்), 2-73(பரணவிதனா), 3-97(ஜெயவர்தனா).
பந்துவீச்சு: மிதுன் 6-1-17-1, இஷாந்த் 4-0-31-0, சேவக் 9-1-17-1, ஹர்பஜன் 13-0-35-1, பிரக்யான் 13-6-13-0.

Related Posts with Thumbnails
Share and Enjoy:
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • Blogplay
  • Add to favorites
  • Diggita
  • LinkedIn
  • MySpace
  • Technorati
  • Tumblr
  • Twitter

Leave a Reply

You must be logged in to post a comment.

We will keep You Updated...
Sign up to receive breaking news
as well as receive other site updates!
Featured Video
Sponsors
Hot Topics

விடைத்தாள் மாயமான மாணவர்களுக்கு மறுதேர்வு : தேர்வு கடினம் என 'புலம்பல்'

முசிறி: முசிறியில், 262 விடைத்தாள் காணாமல் போன மாணவர்களுக்கு, நேற்று ...

மனைவியை எரித்து கொன்ற கணவருக்கு ஆயுள்

பெரியகுளம் : வரதட்சணை கேட்டு மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி, தீ வைத்து ...

ஜெயில் கதவு திறந்தாச்சு ; காற்றாக வருகிறார் நித்தியானந்தர்; ரூ. 3 லட்சம் பணத்துடன் கைது

சிம்லா ; நடிகையுடன் உல்லாசமாக இருந்த நித்தியானந்தர் இமாச்சல பிரதேசத்தில் ...

ஏர்.ஆர்.ரகுமானுக்கு அமெரிக்க கிராமி விருதுகள் : இந்தியர்களையும் - இறைவனையும் நினைவுகூர்ந்தார்

லாஸ்ஏஞ்சல்ஸ்: உலக அளவில் கலைஞர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ...

ரஞ்சிதா விவகாரம்! கையை பிசையும் நடிகர் சங்கம்!!

நடிகை ரஞ்சிதா, பிரபல சாமியார் நித்தியானந்தாவுடன் உல்லாசமாக இருக்கும் ...
Mankatha Official Website
செய்திகளை தேடு
Custom Search
Cute Babies
தேதி வாரியாக
July 2010
M T W T F S S
« Jun   Aug »
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Ads
Endhiran
A2Z Indian Ads
Trailer
ISD Number Search
சுட சுட செய்திகள்
Categories
Recent Posts

வட இந்தியாவில் கடுமையான நிலநடுக்கம்

சிக்கிம்: சிக்கிமில் கடுமையான நிலநடுக்கம் ...

ஆண் பிள்ளைகளுக்கு ஆபத்து என தெருவில் விளக்கேற்றும் பெண்கள்

திருவள்ளூர்: எருமையின் மீது புத்தாண்டு ...

மாணவியை தாக்கிய பயிற்சி ஆசிரியை மீது போலீசில் புகார்

ஆத்தூர் : ஆத்தூரை அடுத்த நாவுக்குறிச்சியைச் ...

எட்டாம் வகுப்பு தேர்வெழுதிய 60 வயது "இளசு'

திருப்பூர் : தாராபுரத்தை சேர்ந்த 60 வயது ...
Recent Comments
Great One... Those who are not an Indian are requested not to answer it.Really bollywood songs are becoming rocking day by day but
Hello... My life,vist it http://sylviaj.webgarden.com/ ,Thanks....
Hello... My life,vist it http://juhuacha.chefcuisto.com/2011/09/02/local-wedding-cakes/ ,Thanks....
Hello... My life,vist it http://juhuacha.chefcuisto.com/2011/09/02/local-wedding-cakes/ ,Thanks....
Hello... My life,vist it http://xiangcai.blogfa.com/post-1.aspx ,Thanks....
Tag Cloud