இன்போசிஸ் டிவிஎஸ் இல்ல திருமணம்
பெங்களூரூ: சாப்ட்வேர் துறையை சேர்ந்த இன்போசிஸ் நாராயணமூர்த்தி மகன் ரோகனுக்கும் டி.வி.எஸ் குழுமத்தின் தலைவர் வேணு சீனிவாசனின் மகள் லட்சுமிக்கும் திருமணம் நடைபெற உள்ளது. ரோகன் தற்போது ஹார்வர்டு பல்கலை கழகத்தில் ஆராய்ச்சிபட்டம் பயின்றுவருகிறார். லட்சுமி யேல் பல்கலை கழகத்தில் பொருளாதார பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவர்களின் திருமணம் குறித்து நாராயணமூர்த்தி கூறியதாவது: லட்சுமி எங்களின் மருமகளாக வருவது எங்களுக்கு மகிழ்ச்சியே. இருப்பினும் திருமண தேதி இன்னும் முடிவாகவில்லை. இதுகுறித்து மே<லும் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என அவர் கூறினார்.






