தொழில் முனைவோருக்கு எஸ்.பி.ஐ., ‘ஸ்மைல்’ கடன்
மதுரை: தொழில்முனைவோருக்காக, பாரத ஸ்டேட் வங்கியில் 'ஸ்மைல்' எனப் படும் புதிய கடன்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தொழிற்படிப்பு மற்றும் தொழில்நுட்பப் படிப்பு படித்தவர்களுக்கு இக்கடன்கள் வழங்கப்படுகின்றன. வழக்கமான கடன் திட்டத்தில், அதிகபட்சமாக 20 சதவீதம் வரை, தொழில்முனைவோர் சுயமுதலீடு செய்ய வேண்டும். இதில் குறைந்தபட்சமாக 7.5 சதவீதம் சுயமுதலீடுசெய்தால் போதும். வேறு எந்தத்தொழிலிலும் ஈடுபடக்கூடாது. அதிகபட்சமாக பத்து லட்ச ரூபாய் வரை ஸ்டேட் வங்கி கடனாக தருகிறது. மருத்துவர்கள், பொறியாளர்கள், டிப்ளமோ படித்தவர்கள், மேலாண்மை பட்டதாரிகள் கடன் பெறலாம். சிறு, குறு மற்றும் நடுத்தரத்தொழில் கொள்கை திட்டத்தின் கீழ், இடம்பெறும் தொழில்களுக்கு கடன் வழங்கப்படும். சில்லரை வணிகத்துக்கு கடன் கிடையாது. இயந்திரங்கள் வாங்க, நடைமுறை மூலதனச் செலவிற்கு இத்தொகையை பயன்படுத்தலாம். உற்பத்தித் தொழில்களுக்கு பத்துலட்சம், தொழிற்படிப்புகளுக்கு ஐந்து லட்சம், மற்ற தொழில்களுக்கேற்ப கடன்தொகையும் நிர்ணயிக்கப்படுகிறது. 'ஈக்விடி லோன் அசிஸ்டென்ஸ்' திட்டத்தின் கீழ் கடன் பெறலாம். கடன் திட்ட அறிமுக விழாவில், பேட்டரி மூலம் இயங்கும் இரு, மூன்று, நான்கு சக்கர வாகன தயாரிப்புத் தொழில் துவங்கும் கிரிதர் ராஜாவுக்கு, கலெக் டர் காமராஜ் கடன்தொகை வழங்கினார். மண்டல மேலாளர் ராமானுஜம், உதவிப் பொதுமேலாளர் அழகிரிசாமி, கப்பலுõர் கிளை மேலாளர் கனகரத்தினம், கடன்மேலாளர் கல்யாணி பங்கேற்றனர்.






