ரஜினி மகள் திருமணம்

சென்னை : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவுக்கும் சென்னை தொழிலதிபர் ஆர்.ராம்குமார் & ஹேமா தம்பதியின் மகன் அஸ்வினுக்கும் சென்னை எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை திருமண மண்டபத்தில் நேற்று திருமணம் நடந்தது. இதற்காக மணமேடை பிரத்யேகமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. ரஜினிகாந்த் பட்டு வேட்டி, சட்டையுடன் தலைப்பாகை அணிந்திருந்தார்.

ரஜினி & லதா தம்பதியருக்கு மணமக்கள் அஸ்வின் & சவுந்தர்யா பாதபூஜை செய்தனர். மணமகனின் கால்களை ரஜினி கழுவி சடங்குகள் செய்தார். மகளை தாரைவார்த்துக் கொடுத்தார். பின்னர், ரஜினியின் மடியில் சவுந்தர்யா அமர்ந்திருக்க, அவரது கழுத்தில் அஸ்வின் தாலி கட்டினார். சவுந்தர்யா அரக்கு நிறத்தில் மடிசார் கூரைப்பட்டு உடுத்தியிருந்தார். மணமகன் பஞ்சக்கச்சம் & அங்கவஸ்திரம் அணிந்திருந்தார். தாலி கட்டி முடித்ததும் அக்னிக் குண்டத்தை தம்பதிகள் வலம் வந்தனர். அவர்களது கையை பிடித்தபடி ரஜினியும் முன்னே சென்றார்.

திருமண விழாவில் ஏராளமான அரசியல் தலைவர்கள், நடிகர், நடிகைகள், திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், டைரக்டர் கே.பாலசந்தர், ஆர்.எம் வீரப்பன், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் நல்லக்கண்ணு, தா.பாண்டியன், உள்ளிட்டோர் மேடைக்கு எதிரே போடப்பட்ட இருக்கையில் அமர்ந்திருந்தனர். அந்த இடத்துக்கு வந்து மணமக்கள் ஆசிபெற்றனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, மதிமுக தலைவர் வைகோ, தேமுதிக தலைவர் விஜயகாந்த், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், பா.ஜ. முன்னாள் தலைவர் இல.கணேசன், திருநாவுக்கரசர், கார்த்திக் ப. சிதம்பரம், ஏ.சி.சண்முகம், திரைப்பட இயக்குனர்கள் எஸ்.பி.முத்துராமன், மணிரத்னம்&சுகாசினி, பாக்யராஜ்&பூர்ணிமா, கே.எஸ்.ரவிகுமார், பி.வாசு, பாண்டியராஜன், ஹரி, தயாரிப்பாளர்கள் டி.ஜி.தியாகராஜன், எஸ்.தாணு, புஷ்பா கந்தசாமி, கவிஞர் வைரமுத்து, கமல்ஹாசன், கவுதமி, சிரஞ்சீவி, வெங்கடேஷ், ரவிச்சந்திரன், அம்பரீஷ், பிரபு, ராம்குமார், சுமன், சிவகுமார், மோகன்பாபு, சின்னிஜெயந்த், ஒய்.ஜி.மகேந்திரன், நடிகைகள் மீனா, ஆண்ட்ரியா, ஸ்ரேயா ரெட்டி, வைஜெயந்திமாலா, விஜயகுமார் & மஞ்சுளா, பாடகிகள் பி.சுசீலா, விஜய் ஜேசுதாஸ் உட்பட ஏராளமானோர் வாழ்த்தினர். விழாவுக்கு வந்தவர்களை தனுஷ் & ஐஸ்வர்யா மற்றும் மணமகன் குடும்பத்தினர் வரவேற்றனர்.

மாலையில் நடந்த வரவேற்பு நிகழ்ச்ச்சியில் முதல்வர் கருணாநிதி மணமக்களை வாழ்த்தினார். அவருடன் தயாளு அம்மாளும் வாழ்த்தினார். மேலும், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன், சன் நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன், காவேரி கலாநிதி மாறன், உதயநிதி ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் ஆ.ராசா, ஜெகத்ரட்சகன், மத்திய இணை அமைச்சர் நெப்போலியன், தமிழக அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, ராஜாத்தி அம்மாள், கனிமொழி எம்.பி, விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி. விசுவநாதன், மேயர் மா.சுப்பிரமணியன், திராவிடகழக தலைவர் கி.வீரமணி, இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், அவர் மனைவி சாயிரா, அன்புமணி ராமதாஸ், சவுமியா அன்புமணி, முன்னாள் சிபிஐ இயக்குனர் கார்த்திகேயன், இயக்குனர் ஷங்கர், ஜெயப்பிரதா, தரணி, சூர்யா, நடன இயக்குனர் ராஜு சுந்தரம், ஒளிப்பதிவாளர் ரத்னவேலு, சுந்தர். சி, குஷ்பு, இயக்குனர்கள் எஸ்.பி.முத்துராமன், சுரேஷ் கிருஷ்ணா,

செல்வராகவன், சந்தான பாரதி, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார், பட்டிமன்றம் ராஜா, தயாரிப்பாளர்கள் கே.ஆர்.ஜி, காட்ரகட்ட பிரசாத், புஷ்பா கந்தசாமி, கமலா தியேட்டர் வி.என்.சிதம்பரம், லேனா தமிழ்வாணன், நடிகை ரம்யா கிருஷ்ணன், காவல்துறை அதிகாரி நட்ராஜ், இயக்குனர்கள் கே.நட்ராஜ், ஆர்.வி.உதயகுமார், லிங்குசாமி, ஜெயம் ராஜா, ஆர்.கே.செல்வமணி, ரோஜா, விட்டல், மதுவந்தி, ஒய்.ஜி மகேந்திரன், ராகவேந்தர், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலாளர் சிவசக்தி பாண்டியன், எடிட்டர் மோகன், நடிகர்கள் ஜெயம் ரவி, நிழல்கள் ரவி, நரேன், ஆர்த்தி, சரண்ராஜ், சங்கவி, பாடலாசிரியர் நா.முத்துக்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் கண்ணன் குழுவினரின் வீணை கச்சேரி நடந்தது.

முன்னதாக நேற்றுமுன்தினம் மாலை நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் மத்திய அமைச்சர் அழகிரி, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தயாநிதி அழகிரி, ஐஸ்வர்யா ராய் & அபிஷேக் பச்சன், ஸ்ரீதேவி & போனிகபூர், வசந்தகுமார் எம்.எல்.ஏ, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் ராம.நாராயணன், அன்பாலயா பிரபாகரன், சிவஸ்ரீ சீனிவாசன், முரளிதரன், பெப்சி தலைவர் வி.சி.குகநாதன், இந்து என். ராம், கே.பாலசந்தர், நல்லிகுப்புசாமி செட்டியார், தெலுங்கு நடிகர் மோகன்பாபு, புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Posts with Thumbnails
Share and Enjoy:
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • Blogplay
  • Add to favorites
  • Diggita
  • LinkedIn
  • MySpace
  • Technorati
  • Tumblr
  • Twitter

Leave a Reply

You must be logged in to post a comment.

We will keep You Updated...
Sign up to receive breaking news
as well as receive other site updates!
Featured Video
Sponsors
Hot Topics

விடைத்தாள் மாயமான மாணவர்களுக்கு மறுதேர்வு : தேர்வு கடினம் என 'புலம்பல்'

முசிறி: முசிறியில், 262 விடைத்தாள் காணாமல் போன மாணவர்களுக்கு, நேற்று ...

மனைவியை எரித்து கொன்ற கணவருக்கு ஆயுள்

பெரியகுளம் : வரதட்சணை கேட்டு மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி, தீ வைத்து ...

ஜெயில் கதவு திறந்தாச்சு ; காற்றாக வருகிறார் நித்தியானந்தர்; ரூ. 3 லட்சம் பணத்துடன் கைது

சிம்லா ; நடிகையுடன் உல்லாசமாக இருந்த நித்தியானந்தர் இமாச்சல பிரதேசத்தில் ...

ஏர்.ஆர்.ரகுமானுக்கு அமெரிக்க கிராமி விருதுகள் : இந்தியர்களையும் - இறைவனையும் நினைவுகூர்ந்தார்

லாஸ்ஏஞ்சல்ஸ்: உலக அளவில் கலைஞர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ...

ரஞ்சிதா விவகாரம்! கையை பிசையும் நடிகர் சங்கம்!!

நடிகை ரஞ்சிதா, பிரபல சாமியார் நித்தியானந்தாவுடன் உல்லாசமாக இருக்கும் ...
Mankatha Official Website
செய்திகளை தேடு
Custom Search
Cute Babies
தேதி வாரியாக
September 2010
M T W T F S S
« Aug   Oct »
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
Ads
Endhiran
A2Z Indian Ads
Trailer
ISD Number Search
சுட சுட செய்திகள்
Categories
Recent Posts

வட இந்தியாவில் கடுமையான நிலநடுக்கம்

சிக்கிம்: சிக்கிமில் கடுமையான நிலநடுக்கம் ...

ஆண் பிள்ளைகளுக்கு ஆபத்து என தெருவில் விளக்கேற்றும் பெண்கள்

திருவள்ளூர்: எருமையின் மீது புத்தாண்டு ...

மாணவியை தாக்கிய பயிற்சி ஆசிரியை மீது போலீசில் புகார்

ஆத்தூர் : ஆத்தூரை அடுத்த நாவுக்குறிச்சியைச் ...

எட்டாம் வகுப்பு தேர்வெழுதிய 60 வயது "இளசு'

திருப்பூர் : தாராபுரத்தை சேர்ந்த 60 வயது ...
Recent Comments
Great One... Those who are not an Indian are requested not to answer it.Really bollywood songs are becoming rocking day by day but
Hello... My life,vist it http://sylviaj.webgarden.com/ ,Thanks....
Hello... My life,vist it http://juhuacha.chefcuisto.com/2011/09/02/local-wedding-cakes/ ,Thanks....
Hello... My life,vist it http://juhuacha.chefcuisto.com/2011/09/02/local-wedding-cakes/ ,Thanks....
Hello... My life,vist it http://xiangcai.blogfa.com/post-1.aspx ,Thanks....
Tag Cloud