ஆலோசனை
உடல்வலிக்கு குட்பை சொல்லுங்க!
வேலைக்கு செல்லும் பெண்கள் அலுவலக வேலை மட்டுமில்லாமல் வீட்டு வேலையையும் செய்து வருகிறார்கள். இதனால் 30 வயதிலேயே கழுத்து வலி, மூட்டு வலி போன்ற பிரச்னைகளால் அவதிப்படுகிறார்கள். வலிகள் இன்றி உங்களின் உடலை சீராக வைத்துக் கொள்ள சில விஷயங்களை கவனத்தில் கொள்வது அவசியம்.
* தூங்கும் போது சரியான அளவு தலையணையை பயன்படுத்த வேண்டும். இதனால் கழுத்து மற்றும் தோள்பட்டையில் ஏற்படும் வலியினை தவிர்க்கலாம்.
* தூக்கம் அவசியம். சரியான அளவு தூங்கினால் தசை, மூட்டு மற்றும் உடல் சீராக இயங்கும்.
* பெண்கள் நீண்ட நேரம் நின்றுகொண்டு வேலை செய்வதை தவிர்க்க வேண்டும். இதனால் மூட்டில் தேய்மானம் ஏற்படும்.
* உங்களுக்கு என உடற்பயிற்சிக்கான நேரத்தினை ஒதுக்குங்கள். குறைந்த பட்சம் 30 நிமிடம் நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.
* காலை எழுந்தவுடன் 10 நிமிடம் தசை இழுப்பு (stretching exercise) செய்வதால் தசைகள் தளர்வடைந்து உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
* மன அழுத்தம் இருந்தால் யோகாசனம் செய்யலாம்.
* சரியான காலணிகள் அணிவது அவசியம். முதுகு, மூட்டு மற்றும் குதிக்கால் வலிகளை தவிர்க்கலாம்.
* நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்காருவதை தவிர்க்க வேண்டும். தசைகள் இறுகி முதுகு வலி கால்வலி ஏற்பட வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண்கள் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை எழுந்து நிற்கலாம், அல்லது பத்தடி நடந்து வரலாம்.
* ஏதாவது ஒரு விளையாட்டை தேர்வு செய்து வாரம் ஒரு முறை விளையாடுவதை வழக்கமாக கொள்ளலாம்.
* புரதச் சத்து மற்றும் கால்சியம் நிறைந்த உணவு எடுத்துக் கொள்வது அவசியம். உடல் தசைகள் மற்றும் எலும்புகளை வலுவாக்கும்.
* எப்போதும் சுறுசுறுப்பாக இருங்க. இது எண்டார்பின் என்ற ஹார்மோனை சுரக்க உதவும். இந்த ஹார்மோன் உங்களை எப்போதும் மகிழ்ச்சியாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்துக் கொள்ள உதவும்.