Aug 10, 2020
பாலிவுட் செய்திகள்

அபிஷேக்கை விட அமிதாப் நட்பானவர்; சொல்கிறார் டாப்ஸி

பிங்க் படத்தில் அமிதாப் பச்சனுடன் நடித்து இருந்தார், டாப்ஸி. இதை தொடர்ந்து மீண்டும் அமிதாப்புடன் பத்லா இந்தி படத்தில் அவர் நடித்து
உள்ளார். இந்தப் படம் விரைவில் திரைக்கு வருகிறது. அமிதாப்புடன் இணைந்து நடித்தது பற்றி டாப்ஸி கூறும்போது, ‘பிங்க் படத்தில் அமிதாப்புடன் நடித்தபோது பயமாக இருந்தது. நடிப்பில் அவர் சிம்பிளாக நம்மை ஓவர்டேக் செய்துவிட்டு போய்க்கொண்டே இருப்பார். அப்போது நாம் உஷாராக நம் கேரக்டரை உள்வாங்கியபடி நடிக்க வேண்டும்.

அந்தப் பட ஷூட்டிங் முடியும்வரை அப்படித்தான் இருந்தது. பத்லா படத்தில் மீண்டும் நடித்தபோது, நாங்கள் நல்ல நண்பர்களாக மாறிவிட்டோம். அவரே, ‘இந்த காட்சியில் இப்படி ரியாக்‌ஷன் கொடு. நான் இதுபோல் செய்கிறேன்’ என்பார். நாங்கள் அரட்டை அடித்தபடி இருப்போம். மன்மர்ஸியான் படத்தில் அபிஷேக் பச்சனுடன் நடித்தேன். இருவரில் அமிதாப் ரொம்பவும் பிரெண்ட்லியாக  பழகுவார்’ என்றார்.