Aug 04, 2020
பாலிவுட் செய்திகள்

ஒரு பாடலுக்கு ஷாருக்கான், கஜோல்?

கரண் ஜோஹர் தயாரிப்பில் உருவாகி வரும் படம், கலன்க். இதில் வருண் தவன், அலியா பட், சோனாக்‌ஷி சின்ஹா உள்பட பலர் நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் தொடங்கிவிட்டன. இந்த நிலையில் படத்தின் விளம்பரத்துக்காக ஒரு சிறப்புப் பாடலை உருவாக்க கரண் ஜோஹர் விரும்புகிறார். அதில் ஷாருக்கான், அஜய் தேவகன், கஜோல், ராணி முகர்ஜி ஆகிய 4 பேரை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார்.

இந்த 4 பேருமே கரண் ஜோஹருக்கு நெருங்கிய நண்பர்கள். அதே நேரம், சில வருடங்களுக்கு முன் ஷாருக்கானுக்கும், அஜய் தேவகனுக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது.  இதை தொடர்ந்து இருவரும் நேரில் சந்தித்தாலும் முகத்தை திருப்பிக் கொண்டு செல்லும் நிலை இருக்கிறது. எனவே, கலன்க் பட பாடலில் இவர்கள் சேர்ந்து நடிப்பது சந்தேகம்தான் என்கிறது, இந்தி பட வட்டாரம்.