Jan 18, 2020
பாலிவுட் செய்திகள்

ராஜமவுலி படத்துக்கு அதிக சம்பளம் கேட்கும் அலியா பட்

பாகுபலி 2 படத்துக்குப் பிறகு ராஜமவுலி அடுத்து இயக்கி வரும் புதிய படத்தில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண் தேஜா இணைந்து நடித்து வருகின்றனர். இதில் ஹீரோயினாக நடிக்க அலியா பட் பெயர் ஆலோசிக்கப்பட்டது. அலியா குருவான கரண் ஜோஹர், பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களையும் இந்தியில் வெளியிட்டார். இப்போது ராஜமவுலியின் அடுத்த படத்தையும் இந்தியில் வெளியிடுகிறார்.

எனவே, கரண் ஜோஹர் மூலமாக அலியாவை நடிக்க வைக்க ராஜமவுலி முயற்சி செய்தார். இதனால் அலியா நடிக்க சம்மதித்து விட்டதாகவும், ஆனால் பெரிய தொகையை சம்பளமாக கேட்பதாகவும் கூறப்படுகிறது. சம்பள பிரச்னை தீர்க்கப்பட்டதும் அவர் படத்தில் ஒப்பந்தமாவார் என்று படக்குழு தெரிவித்தது. தவிர, இன்னொரு ஹீரோயினாக பிரிட்டீஷ் மாடல் ஒருவர் அறிமுகமாகிறாராம்.