Jan 24, 2020
பாலிவுட் செய்திகள்

டூபீஸில் காற்று வாங்கும் ஆப்தே....

கோலிவுட் ஹீரோயின்கள் கனவு பாலிவுட்டாகவும், பாலிவுட் ஹீரோயின்கள் கனவு ஹாலிவுட்டாகவும் இருக்கிறது. தமன்னா, காஜல் அகர்வால், லட்சுமிராய் கோலிவுட்டிலிருந்து கிளம்பி பாலிவுட்டில் ஒரு சில வாய்ப்புகள் பெற்றனர். பிறகு சென்ற வேகத்திலேயே சுவற்றில் அடித்த பந்தாக கோலிவுட்டுக்கே திரும்பியும் வந்தனர். கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என மூன்றிலும் கால் பதித்திருக்கிறார் ராதிகா ஆப்தே.

ஹாலிவுட் என்றதும் டாப்லெஸ். நிர்வாண காட்சிக்கும் இவர் துணிந்துவிடுகிறார். அவர் நடித்த, ‘அந்தாதுஹன்’ சீனாவில் வெளியாகி ரூ.300 கோடி வசூலித்திருக்கிறது. இதையடுத்து சீனா படத்துக்கும் தயாராகி வருகிறார். சில தினங்களுக்கு முன் பீச் பக்கம் காற்று வாங்கப்போன ராதிகா ஆப்தே டூபீஸ் நீச்சல் உடை அணிந்து படகில் ஏறி கடலுக்குள் சென்றார்.

படகின் பக்கவாட்டு தடுப்பு கம்பி மீது அமர்ந்தபடி ஜாலியாக காற்று வாங்கும் கிக்கான படத்தை வெளியிட்ட ராதிகா ஆப்தே ‘படகில் அமர்வதற்கு மிகவும் பொருத்தமான இடத்தை கண்டு பிடித்துவிட்டேன்’ என படத்துக்கு கேப்ஷன் பதிவிட்டிருக்கிறார். சீனா மொழி படத்திலும் ஒரு இடத்தை ரிசர்வ் செய்துவிட்டேன் என்பதை ராதிகா ஆப்தே குறிப்பில் உணர்த்தியிருக்கிறாராம்.