Aug 06, 2020
பாலிவுட் செய்திகள்

கல்யாணத்துக்கு பணமில்லை... ‘கப்சா’ விடுகிறார் சல்மான்

பாலிவுட் நடிகர் சல்மான்கான் 53 வயதாகிவிட்ட பிறகும் திருமணம் செய்யாமல் காலம் கழித்துக் கொண்டிருக்கிறார். கல்யாணம் செய்யாமல் தனிமையில் இருப்பது ஏன்? என்றபோது, ‘திருமணம் செய்வதற்கு இப்போது லட்சங்கள் தொடங்கி கோடிகளில் செலவு ஆகுகிறது. அவ்வளவு செலவு செய்ய என்னிடம் பணம் கிடையாது. ஆனால் எனக்கு தந்தை ஆகும்  எண்ணமிருக்கிறது. செயற்கை முறையில் குழந்தை பெற்றுக்கொள்வேன்’ என்றார்.

அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவரான சல்மான்கான், திருமண செலவுக்கு பணம் இல்லை என்று சொல்லும் புளுகுமூட்டையை நம்ப முடியாது என்று ரசிகர்கள் கலாயத்திருக்கின்றனர். வேறு சிலரோ, ஐஸ்வர்யாராய், கேத்ரினாகைப்பிடம் ஏற்பட்ட காதல் தோல்வியால் மனம் உடைந்ததாலேயே திருமணத்தை வெறுத்து விட்டார் சல்மான்’ என்றும் கமென்ட் வெளியிட்டுள்ளனர்.