Dec 03, 2020
பாலிவுட் செய்திகள்

கஞ்சாவுக்கு சட்டப்பூர்வ அனுமதி வழங்க வேண்டும்: நடிகை கோரிக்கை

பிரபல கன்னட நடிகை நிவேதிதா. தமிழில் போர்க்களம், சித்திரம் பேசுதடி 2, மார்கண்டேயன் படங்களில் நடித்துள்ளார். திரையுலகில் போதை மருந்து பயன்பாடு குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வரும் சூழ்நிலையில் நிவேதிதா, கஞ்சாவுக்கு சட்டப்பூர்வ அனுமதி வழங்க வேண்டும் என்று டிவிட்டரில் கருத்து தெரிவித்திருப்பது நெட்டிசன்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

‘கஞ்சா, துளசியை போல மருத்துவ குணம் கொண்டது. கஞ்சாவை தடை செய்வதற்கு முன்பு பல்வேறு சிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. 40 நாடுகள் கஞ்சாவை மருத்துவத்துக்கு பயன்படுத்த சட்டப்பூர்வ அனுமதி வழங்கி இருக்கிறார்கள். இங்கும் அதை சட்டப்பூர்வமாக்க வேண்டும்’ என்று அவர் கருத்து தெரிவித்திருக்கிறார். நிவேதிதாவின் இந்த கருத்துக்கு இணையதளத்தில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. அவர் மீது மல்லேஸ்வரத்தை சேர்ந்த தீபக் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.