Dec 03, 2020
பாலிவுட் செய்திகள்

சிங்கிள்தான் சந்தோஷம்: ராஷ்மிகா

என்னைப் பற்றி வரும் எந்த கிசு கிசுவையும் நம்ப வேண்டாம் என ரசிகர்களுக்கு கோரியுள்ளார் ராஷ்மிகா. தெதலுங்கு, கன்னட படங்களில் நடித்து வரும் இவர், தமிழில் கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் அறிமுகமாக உள்ளார். கன்னட நடிகர் ரக்‌ஷித் ஷெட்டி என்பவரை ராஷ்மிகா காதலித்தார். இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து, பின்னர் முறிந்து போனது. இந்நிலையில் விஜய் தேவரகொண்டா உள்பட பல ஹீரோக்களுடன் இணைத்து ராஷ்மிகா கிசு கிசுக்கப்பட்டு வருகிறார். 

இது பற்றி ராஷ்மிகா கூறியது: யார் யாருக்கு யார் யார் என்பதை ஆண்டவன் முன்பே முடிவு செய்துவிடுகிறான். அதனால்தான், ஒருவருடன் நிச்சயம் செய்யப்பட்ட பிறகு நான் அவரிடமிருந்து தூரம் போனேன். இப்போதும் நான் யாருடனும் இல்லை. சிங்கிளாகவே இருக்கிறேன். சிங்கிளாக இருப்பதிலேயே சந்தோஷமாகவும் இருக்கிறேன். அந்த சந்தோஷத்தை பார்க்க முடியாதவர்கள் பலவிதமான வதந்திகளை பரப்புகிறார்கள். அதையெல்லாம் நீங்கள் (ரசிகர்கள்) நம்ப வேண்டாம்.