Jul 12, 2020
குற்றம்

சிறுமிக்கு பாலியல் தொல்லை ஆட்டோ டிரைவர் போக்சோவில் கைது

ஸ்ரீபெரும்புதூர்:  சிறுமியை தனிமையில் வரவழைத்து பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். ஸ்ரீபெரும்புதூர் அருகே படப்பை அடுத்த சாலமங்கலம், லட்சுமி நகர், 3வது தெருவை சேர்ந்தவர் ஆரோன் ஜெயக்குமார் (23). இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை கடந்த 5 மாதமாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த சிறுமியை அழைத்துக்கொண்டு அதே பகுதியில் உள்ள காட்டு பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் பெண்ணை காணாமல் பெற்றோர் அவளை தேடி அலைந்தனர். பின்னர் காட்டுப்பகுதியில் இருவரும் ஒன்றாக இருப்பதை அறிந்து சென்று சிறுமியை மீட்டு வந்தனர். இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஆரோன் விஜயகுமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.