Feb 28, 2021
குற்றம்

சென்னையில் பித்தளை செம்பு வைத்து இரிடியம் தருவதாக மோசடி செய்த புகைப்படக்கலைஞர் மற்றும் அவரது நண்பர் கைது

சென்னை: சென்னை விருகம்பாக்கத்தில் பித்தளை செம்பு வைத்து இரிடியம் தருவதாக மோசடி செய்த புகைப்படக்கலைஞர் நியூட்டன் மற்றும் அவரது நண்பர் ராகு கணேஷ்ஜி என 2 பேரை  காவல்த்துறையினர் கைது செய்துள்ளார். விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த புகைப்படக்கலைஞர் நியூட்டன் மற்றும் அவரது நண்பர்கள் ராகுல்ஜி ஆகிய இரண்டு பேரையும் கடந்த 19-ம் தேதி காரில் 5 பேர் கொண்ட கும்பல் கடத்தி சென்றனர். இது தொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

 இந்த விசாரணைக்கு பிறகு திருமுல்லைவாயில் அடுத்த பகுதியில் வைத்து மீட்கப்பட்டனர். இதை தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்டவர்கள் மற்றும் கார் ஓட்டுநர் என 6 பேரை காவல் துறையினர் கைது போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் நியூட்டன் மற்றும் அவரது நண்பர் ராகுல்ஜி இரிடியம் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதன் தொடர்ச்சியாக முதல்கட்டமாக கடத்தலில் ஈடுபட்ட திலீப், சதீஷ், கவுதம் உள்ளிட்ட 6 பேரை காவல்த்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் இரிடியம் தருவதாக ரூ.57 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக நியூட்டன் மற்றும் ராகுல்ஜி ஆகிய இரண்டு பேரையும் விருகம்பாக்கம் போலீசார் கைது செய்துள்ளார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கூறப்படும் பெங்களூருவை சேர்ந்த மேத்யூ என்பவர் தலைமறைவாக உள்ளார். அவரை பிடிப்பதற்காக தனிப்படை போலீசார் பெங்களூரு செல்ல உள்ளனர்.

புகைப்பட கலைஞர்  நியூட்டன்,  அவரது நண்பரான ராகுல்ஜி மற்றும் தப்பிச்சென்ற மேத்யூ ஆகியோர் இதுவரை எத்தனை நபர்களை ஏமாற்றியுள்ளனர் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவர்கள் கடத்துவதற்கு பயன்படுத்திய கார், இருசக்கரம் வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.