Apr 11, 2021
குற்றம்

வீட்டில் நகை கொள்ளை

பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டை அடுத்த கோபாலபுரம் கிராமத்தை சேர்ந்தவர் தனசேகர்(35). விவசாயி. குடும்பத்துடன் சித்தூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று நேற்று காலை வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பது பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 17 சவரன் நகை மற்றும் ரூ.3 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. தகவலறிந்த ஆர்.கே.பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேந்திகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனையிட்டனர். மேலும், புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.