Apr 11, 2021
குற்றம்

கஞ்சா விற்றவர்கள் கைது

ஆவடி: ஆவடி அடுத்த பொத்தூரில் உள்ள காலி மைதானத்தில் சிலர் கஞ்சா விற்பதாக ஆவடி டேங்க் பேக்டரி போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையில் போலீசார் மாறுவேடத்தில் சென்று சம்பவ இடத்தை கண்காணித்தனர். அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் நின்ற வாலிபரை பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். விசாரணையில்,  பொத்தூர் வள்ளி வேலன் நகரை சேர்ந்த வினோத்(30). ஆந்திரா மாநிலத்தில் இருந்து கஞ்சாவை கடத்தி ஆவடி சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனை செய்தது தெரியவந்தது. அவரை கைது செய்து 2 கிலோ  கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் சோதனைச்சாவடியில் கும்மிடிப்பூண்டி காவல் துணை கண்காணிப்பாளர் ரமேஷ் உத்தரவின்பேரில் நேற்று ஆரம்பாக்கம் சிறப்பு காவலர் நாராயணன் தலைமையில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து சென்னைக்கு வந்த தமிழக அரசு பேருந்தில் (தடம் எண் 103பி) மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த ரவி(40) பையில் 10 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.