Apr 12, 2021
குற்றம்

கஞ்சா விற்ற 2 பேர் கைது

பெரம்பூர்: எம்.கே.பி.நகர் போலீசார் நேற்று மதியம் முல்லை நகர் பேருந்து நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக இரண்டு பேர் நடந்து செல்வதை பார்த்து அவர்களை அழைத்து சோதனை செய்தனர். அப்போது, அவர்களிடம் 5 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தனர். அதில் எம்.கே.பி.நகர் பகுதியை சேர்ந்த கார்த்திக்(20), மீது எம்.கே.பி.நகர் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இதேபோல் புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த ராவணன்(65), மீது புளியந்தோப்பு காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன. எனவே இருவரையும் கைது செய்த போலீசார் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.