Apr 13, 2021
குற்றம்

சாராயம் விற்ற 3 பேர் கைது

சென்னை: உத்திரமேரூர் அருகே வீட்டில் எரி சாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்த 3 பேரை, போலீசார் கைது செய்தனர். உத்திரமேரூர் அடுத்த ஆர்.என்.கண்டிகை கிராமத்தில் எரிசாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக பெருநகர் போலீசாருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை நடத்தினர்.அப்போது, அருளானந்தராஜ் (எ) மணி(38) என்பவரது வீட்டில் எரிசாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்ததை கண்டுபிடித்தனா். இதையடுத்து போலீசார் அங்கிருந்து 20 லிட்டர் எரிசாராயத்தை பறிமுதல் செய்தனர். மேலும், எரிசாராயத்தை பதுக்கி விற்ற அருளானந்தராஜ் (எ) மணி, இமானுவேல் (52), சாலமன்(30) ஆகியோரை கைது செய்தனர்.