Apr 13, 2021
குற்றம்

மகள், மருமகனை வெட்டி கொன்ற தொழிலாளி

பாப்பாக்குடி: நெல்லை மாவட்டம், பாப்பாக்குடி அருகே நந்தன்தட்டை கிராமத்தைச் சேர்ந்த விவசாய தொழிலாளி புலவேந்திரன். இவரது ஒரே மகள் மஞ்சு என்ற உச்சிமாகாளியை (25), செல்வம் (30) என்பவருக்கு திருமணம் செய்து வீட்டோடு வைத்துள்ளார். இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.  செல்வம் சரிவர வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் செல்வம், மஞ்சு தம்பதி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அங்கு வந்த புலவேந்திரன் கடைசி பேரக்குழந்தையை எடுத்து கொஞ்சிக்  கொண்டிருந்தார். அப்போது செல்வம், மாமனாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த புலவேந்திரன் அரிவாளை எடுத்து செல்வத்தை சரமாரியாக வெட்டினார். மகள் மஞ்சு தடுக்க அவருக்கும் வெட்டு விழுந்தது. இதில் இருவரும் குழந்தைகள் கண் முன்னே  ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தனர். பின்னர், புலவேந்திரன் பாப்பாக்குடி போலீசில் சரண் அடைந்தார்.