Apr 02, 2020
வர்த்தகம்

மதுரையில் ஏராளமான மக்கள் பொருட்களை வாங்க குவிந்ததால் காய்கறி விலை கிடுகிடு உயர்வு

மதுரை: மதுரையில் ஏராளமான மக்கள் பொருட்களை வாங்க குவிந்ததால் காய்கறி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. மதுரை மாட்டுத்தாவணி சந்தையில் ரூ.10-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ தக்காளி மாலையில் ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. காலையில் ரூ.40-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ சின்னவெங்காயம் மாலையில் ரூ.70-ஆக உயர்ந்துள்ளது. காலை நேர விலையுடன் ஒப்பிடுகையில் பழ வகைகளின் விலையும் கிலோவுக்கு ரூ.30 அதிகரித்துள்ளது.