Dec 05, 2020
வர்த்தகம்

தங்கம் விலை மேலும் மாற்றம் சவரனுக்கு 208 குறைந்தது

சென்னை: தங்கம் விலை யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் கடந்த சனிக்கிழமை தங்கம் விலை அதிரடி சரிவை சந்தித்தது. சவரனுக்கு 1464 குறைந்து  ஒரு சவரன் 37,440க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் தங்கம் விலை சற்று உயர்ந்தது. கிராமுக்கு 29 அதிகரித்து ஒரு கிராம்  4,709க்கும், சவரனுக்கு 232 அதிகரித்து ஒரு சவரன் 37,672க்கும் விற்க்கப்பட்டது. நேற்று காலையில் தங்கம் விலையில் மேலும் மாற்றம்  காணப்பட்டது. கிராமுக்கு 39 குறைந்து ஒரு கிராம் 4,670க்கும், சவரனுக்கு 312 குறைந்து ஒரு சவரன் 37,360க்கும் விற்கப்பட்டது.

மாலையில் தங்கம் விலை மேலும் மாற்றம் காணப்பட்டது. அதாவது, நேற்று முன்தினம் விலையை விட கிராமுக்கு 26 குறைந்து ஒரு கிராம்  4,683க்கும், சவரனுக்கு 208 குறைந்து ஒரு சவரன் 37,464க்கும் விற்கப்பட்டது. வரும் நாட்களில் விஷேச தினங்கள் அதிக அளவில் வருகிறது. இந்த  நேரத்தில் விலை குறைந்துள்ளது நகை வாங்குவோருக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.