Aug 18, 2022
வர்த்தகம்

வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்து ரூ.1068.50 க்கு விற்பனை... வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.8.50 குறைந்தது!!

சேலம்: நாடு முழுவதும் வீட்டு உபயோக சிலிண்டர் விலை நடப்பு மாதம் ரூ.50 உயர்ந்து ரூ.1068.50 க்கு விற்பனையாகிறது. வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ..8.50 காசுகள் குறைந்து ரூ.2177.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல், சமையல் காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது.கடந்த. மே மாதம் மட்டும் 2 முறை வீட்டு உபயோக சிலிண்டர், வர்த்தக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது.

இதனால் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ஆயிரம் ரூபாயையும், வர்த்தக சிலிண்டர் ரூ. 2 ஆயிரத்தையும் தாண்டியது. ஜூன் மாதத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. வர்த்தக சிலிண்டர் விலையில் ரூ134 குறைக்கப்பட்டது. நடப்பு மாதம் ஜூலை 6ம் தேதி எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு அறிவித்த புதிய விலை பட்டியலில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்து ரூ.1068.50 க்கு விற்பனையாகிறது. 19 கிலோ எடை கொண்ட வர்த்தக சிலிண்டர் விலை ரூ..8.50 காசுகள் குறைந்து ரூ.2177.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக கடந்த 1ம் தேதி 19 கிலோ எடை கொண்ட வர்த்தக சிலிண்டர் விலையில் ரூ187 குறைக்கப்பட்டது.